விசிக ஆதவ் அர்ஜுனா, லாட்டரி மார்ட்டின் வீடுகளில் இரண்டாவது நாளாக ரெய்டு!
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று திடீர் ரெய்டு நடத்தியது. அவரது மருமகன் விசிக ஆதவ் அர்ஜுனாவின் வீடுகளிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ரெய்டு இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
சிக்கிம் மாநிலத்தின் லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக பணம் ஈட்டியதாகவும், கோவையின் மார்ட்டின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமான வீடுகள், கெஸ்ட் ஹவுஸ், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் கடந்த 2019ல் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதில் ரூ.910 கோடி அளவுக்கு அவர் அளவுக்கு அதிகமான வருமானம் ஈட்டியதாகவும், இதை கொண்டு 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வருமான வரித்துறையினரும் ரெய்டு நடத்தினர். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொடர் ரெய்டுகளில் ரூ.451.7 கோடி அளவுக்கு சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த ரெய்டுகள் கடந்த ஆண்டு கூட நடந்தன. இப்படி இருக்கையில், நேற்று திடீரென கோவையின் வெள்ளக்கிணறு, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
அதேபோல சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது மருமகனும், விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் வீடு, மார்ட்டினின் மகன் வீடுகளிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கிய ரெய்டு நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அதேபோல இன்று காலையிலும் ரெய்டு நீடித்து வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரெய்டு முழுமையடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளிவரும்.
-
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications