ஜெ.செல்வாக்கில் எம்எல்ஏ...செல்வப்பெருந்தகைக்கு அட்ரஸ் கொடுத்தது அதிமுகதான் - எடப்பாடி பழனிச்சாமி

செல்வப்பெருந்தகையை எம்எல்ஏவாக ஜெயிக்க வைத்து அட்ரஸ் கொடுத்ததே அதிமுகதான் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் பேசும் போது அதிமுகவை குறை சொல்லியே பேசுகிறார் செல்வப்பெருந்தகை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா செல்வாக்கில் எம்எல்ஏவான செல்வப்பெருந்தகை தற்போது ஜெயலலிதாவை குறை சொல்லி பேசுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் கும்பகோணம் மகாமகம் விபத்து தொடர்பாகவும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து அவர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி


தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி சார்பில் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது, அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர், திருவிழா தொடர்பாக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை. அரசியல் ஆக்கக்கூடாது. டெல்டா மாவட்டங்களில் இதுபோல் நடக்கிறது. இதற்கு முன்னரும் இதேபோல் பெரிய விபத்துகள் நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழியும் கும்பகோணம் மகாமகத்தில் நீராட சென்று போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். 2004ம் ஆண்டு கும்பகோணம் விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து இதுபோல் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

 அதிமுக உறுப்பினர்கள் கூச்சல்

அதிமுக உறுப்பினர்கள் கூச்சல்

மகாமகத்தின் போது ஏற்பட்ட விபத்து குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேசிய விவரங்களை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்க கோரி அதிமுகவினர். தொடர்ச்சியாக கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையில் பேச முற்பட்ட போது, வெளிநடப்பு செய்துவிட்டு பேச அனுமதி கேட்டால் கொடுக்க முடியாது என பேரவை தலைவர் அனுமதி மறுத்தார்.

கண்டன முழக்கம்

கண்டன முழக்கம்

அதனைத் தொடர்ந்து பேரவை உள்ளேயே அதிமுக எம்எல்ஏஎள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவையில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் மூலம் வெளியேற்ற பேரவை தலைவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேரவை வளாகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பினர். வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தஞ்சாவூரில் நடைபெற்ற துயரமான சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேசினேன். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபோது கூட்ட நெரிசலில் 2 பேர் உயிரிழந்தது குறித்தும் பேசினோம்.

திட்டமிட்டு குற்றம் சாட்டுகிறார்

திட்டமிட்டு குற்றம் சாட்டுகிறார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தகை வேண்டுமென்றே திட்டமிட்டு தேவையில்லாத கருத்தை பதிவு செய்தார். திமுகவின் தூண்டுதலின்பேரில் அவர் பேசியதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் செல்வபெருந்தகை பேசும்போதும் அதிமுகவை குறை சொல்லியே பேசி வருகிறார். மகாமகம் சம்பவத்துக்கும் தற்போது நிகழுந்துள்ள சம்பவத்துக்கும் தொடர்பில்லை.

செல்வப்பெருந்தகைக்கு அட்ரஸ்

செல்வப்பெருந்தகைக்கு அட்ரஸ்

கடந்த 2006ஆம் ஆண்டு ஜெயலலிதா செல்வாக்கினால்தான் செல்வப்பெருந்தகை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். செல்வ பெருந்தகைக்கு விலாசம் கொடுத்ததே அதிமுகதான். அப்போதெல்லாம் அவருக்கு அதிமுகவைப் பற்றி தெரியாதா? என்று கேட்டார் எடப்பாடி பழனிச்சசாமி.

 அவை நாகரீகம்

அவை நாகரீகம்

கடந்த 2016ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடைபெற்றது. அதில் எந்த ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடைபெறாமல் அந்த விழாவை நடத்தி முடித்தோம். இன்றைய தினம் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் அவை நாகரீகம் பற்றி பேசுகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு பேரவைத் தலைவரை இருக்கையில் இருந்து அகற்றி விட்டு அந்த இருக்கையில் அமர்ந்தவர். அவர் அவை நாகரீகம் பற்றி பேசுகிறார்.

வருத்தமளிக்கிறது

வருத்தமளிக்கிறது

அதிமுக மக்கள் பிரச்சினையை முன்வைத்துதான் பேசுகிறோம். அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தது நாட்டு மக்களின் பிரச்சினை. திருவிழா காலங்களில் தொடர்ந்து இது போல பிரச்சினை நடைபெறுகிறது என்று கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?. செல்வப்பெருந்தகை ஒவ்வொரு முறையும் அதிமுகவை குறை சொல்லி பேசுகிறார். அதற்கு சபாநாயகர் வாய்ப்பளிப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+