சரிகிறதா.. இல்லை.. கூடுகிறதா.. ஒரே குழப்பமா இருக்கே.. அங்கேதான் நிற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
ஆட்சியை கலைக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் போடுவதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: நாள் ஆக ஆக எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சரிவை நோக்கி செல்கிறதா அல்லது பலம் கூடி செல்கிறதா என்பது குழப்பமாக உள்ளது!
எப்படியும் மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்றாலும், கையில் உள்ளதோ 114தான். அதனால் 4 இடங்களில் மட்டும் ஜெயித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கணக்கு!
மற்றொரு பக்கம், எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் இவர்களை தவிர அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு என மொத்தம் 6 பேர் ஆதரவா, எதிர்ப்பா என்று வெளிப்படையாக சொல்லாமல் குழப்பி அடிக்கிறார்கள். ஒருவேளை எதிராக போய்விட்டால், ஏற்கனவே 4 + 6 என்று 10 பேர் ஆதரவு எடப்பாடிக்கு தேவைப்படும். இது மற்றொரு கணக்கு.

கருணாஸ்
ஆனால் தனியரசு தவிர கருணாஸ், தமீமுன் அன்சாரி இவர்கள் இருவரும் எதிராக இருந்து இப்போது ஆதரவு என்கிறார்கள். கருணாஸ் எடப்பாடியை பேசாத பேச்சு இல்லை.. அன்சாரியோ திமுகவுக்கு ஆதரவு என்று ஓபனாகவே சொன்னவர்.. ஆனால் இப்போது எடப்பாடிக்குதான் ஆதரவு என்கிறார்கள்!

எடப்பாடி கணக்கு
தன் ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் எதற்காக 3 பேர் பதவி பறிப்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறாராம். அதே சமயம், ஆதரவு என்று சொன்னாலும், தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். ஒருவேளை அவர்கள் 3 பேரும் எதிராக நின்றுவிட்டால், அந்த 3 இடங்களிலும் தனக்கு சாதகமான 3 பேரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து தன் கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி கணக்கு போடுகிறாராம்.

ஆளுநர்
இது எல்லாவற்றையும் விட செம திட்டம் ஒன்று எடப்பாடி கையில் உள்ளதாம். அதாவது ஒருவேளை 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கவிழ்க்க ஏதாவது முயற்சி செய்தால், ஆளுநரிடம் தனக்கே பெரும்பான்மை இருப்பதாக சொல்லவும், அதனை நிரூபிக்கவும் ஆளுநரிடம் வாய்ப்பு கேட்கலாமா என்று யோசிக்கிறாராம்.

பிளஸ்தான்
ஏனென்றால், கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைக்க எப்படியும் திமுக ஒத்துக்காது. தனித்து தான் ஆட்சி அமைக்க யோசிக்கும். அதனால் ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முடிவு செய்தால்கூட, எடப்பாடிக்கு பிளஸ்தானாம்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications