எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிடம் விசாரணையா?.. கொடநாடு வழக்கில் ஹைகோர்ட்டில் இன்று வழக்கு.. பரபப்பு
எடப்பாடி மற்றும் சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு விசாரணைக்கு வருகிறது
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனுவானது, இன்று ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி ஹைகோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017, ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக, ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது...

விசாரணை
கடந்த மாதம், இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

புதிய மனு
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஹைகோர்ட்டில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

புலன் விசாரணை
அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டது.. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் என்றும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை நடத்தாமல், முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது..

பேட்டி
இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி ,சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய வழக்கில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.. இந்நிலையில் இன்று, எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை விசாரிக்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பேசும்போது சொன்னதாவது:

மனு தாக்கல்
"கொடநாடு நீதிமன்ற விசாரணை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.. அரசு தரப்பு வேண்டுதலுக்கிணங்க 3 வாரம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாயையும், சசிகலாவையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்தரப்பினர் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.. அந்த தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று வரஉள்ளது" என்றார்.

டென்ஷன்
இதுதான் அதிமுக தரப்பில் பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.. காரணம், இந்த வழக்கில் தன் பெயர் சேர்க்கப்பட்டதை அறிந்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி டென்ஷனில் காணப்பட்டு வருகிறார்.. சட்டமன்றத்திலும் இதை பற்றி கேள்வி எழுப்பினால் கோபத்துடன் பதிலளித்தார்.. அப்படித்தான் முதல்வர் ஸ்டாலின் அவையில் பேசியபோது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

கேள்வி
"கோடநாடு விவகாரம் சாதாரண விசயமல்ல... முன்னாள் முதலமைச்சரின் முகாமாக இருந்த இடத்தில் நடைபெற்ற சம்பவங்களை எதில் சேர்ப்பது? கோடநாடு சம்பவம் நடந்த பிறகும் நீங்க தானே 4 ஆண்டுகள் முதல்வர்? அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன்? வழக்கை விசாரிக்க கூடாது என்று கோர்ட்டுக்கு எதுக்காக சென்றீர்கள்?" என்று ஸ்டாலின் கேட்டிருந்தார்.

எடப்பாடி
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'கோடநாடு சம்பவம் நடைபெற்றவுடன் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை,.. நீதிமன்றத்தில் வழக்கு முறைப்படி நடைபெற்று வருகிறது. எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை" என்று பதிலளித்திருந்தார்.

பதற்றம்
கொடநாடு வழக்கில் தம்மை சிக்க வைக்க சதி நடக்கிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்த நிலையில், சட்டசபையிலும் இதை பற்றி பேச அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொடநாடு விவகாரத்தில் நேரடியாக விசாரணை நடத்தப்படுமோ என்ற பதற்றம் அதிமுக மேலிடத்தை கவ்வியுள்ளது.

விசாரணை
இதனிடையே, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஊட்டி கோர்ட்டில் சயான் ஆஜரானார்.. தனிப்படை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், விசாரணை அதிகாரி வேல்முருகன் நீதிமன்றம் வந்திருந்தனர.. தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை இன்று தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒத்திவைப்பு
ஆனால், வழக்கு விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது... அரசு தரப்பில் புலன் விசாரணைக்கு கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications