”ஒரே கல்லில் இரு மாங்காய்” மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டம்.. களமிறங்கும் இபிஎஸ்!
சென்னை: மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பாக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கி உள்ளது. அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள், பெரிதாக பலனளிக்கவில்லை. இபிஎஸ் தரப்பில் இருந்து ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே ஓபிஎஸ் பக்கம் சென்றார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேபோல் கட்சியின் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், வெற்றிபெற முடியவில்லை. இதனால் உற்சாகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி ரீதியாக அடுத்தடுத்த பணிகளை தொடங்கியுள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இன்று முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டங்கள் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில் இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது நாளை திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த பேச்சுவார்த்தைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே கல்லில் இரு மாங்காய்
இது அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் என்பதை உறுதி செய்வதோடு, திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும், மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைபேசி மூலம் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுப்பயணம்
இதுமட்டுமல்லாமல் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை பணிகளை முடித்துவிட்டு, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை அறியவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications