சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கிலியில்" எடப்பாடி.. அவசர அவசரமா ரெடியாகுறாரே.. திடீர் அழைப்பு.. என்னவா இருக்கும்.. கவனிக்கும் பாஜக

நாளைய தினம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மா.செக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து என்னென்ன நிகழ்வுகள் நடக்க போகிறது? பாஜக + ஓபிஎஸ் குறித்து, எடப்பாடி பழனிசாமி என்ன நிலைப்பாட்டை எடுக்க போகிறார்? என்ற ஆவலும் கட்சி தொண்டர்களிடம் அதிகமாகவே பெருகி கொண்டுவருகிறது.. பாஜக எதிர்ப்பு மற்றும் பாஜக ஆதரவு என்ற இருவேறு டீம்கள் தன்னை சுற்றியே படர்ந்துள்ள நிலையில், இவர்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு, அதிமுகவின் மூத்த தலைவர் கேசி பழனிசாமி பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து தன்னுடைய கருத்துக்களையும், அனுமானங்களையும் பகிர்ந்திருந்தார்.

"பாஜகவை பொறுத்தவரை அவர்களின் தேர்தலின் வியூகமே வித்தியாசமானது.. பல்வேறு மாநிலங்களில் இப்படித்தான் செய்து வருகிறார்கள்..

முடித்துக்கட்ட எடப்பாடி 'சிக்னல்'.. பாஜக கோபப் பார்வை..? “ஈபிஎஸ் ஆடும் கேம்”.. குபேந்திரன் 'பளிச்’! முடித்துக்கட்ட எடப்பாடி 'சிக்னல்'.. பாஜக கோபப் பார்வை..? “ஈபிஎஸ் ஆடும் கேம்”.. குபேந்திரன் 'பளிச்’!

 டீம் டீமாக

டீம் டீமாக

எந்த கட்சியுடன் அவர்கள் கூட்டணி வைக்க முற்பட்டாலும், முதலில் அதை 4, 5 பகுதிகளாக, குழுக்களாக, துண்டுகளாக பிரிப்பார்கள்.. அந்த குழுக்களை பாஜகவின் தலைமையிலேயே இருக்கும்படி கூட்டணி வைத்து கொள்வார்கள்.. அப்படித்தான், ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்று இரண்டாக பிரித்து, இரண்டிலும் கூட்டணி வைத்து கொள்வார்கள்.. அதையும் 2, 3 ஆக மறுபடியும் பிரித்து, மறுபடியும் கூட்டணி வைத்து கொள்வார்கள்.. அதாவது அதிமுக வாக்குகளை, பிளந்து, பிரித்து, தன்னை வலிமைப்படுத்தி கொள்கிற வழிவகையைதான் பாஜக கடைப்பிடித்து வருகிறது. இனியும் அப்படித்தான் கடைப்பிடிக்கும்.

 பயம் காட்றாங்க

பயம் காட்றாங்க

அதனால், சிவி சண்முகம் பேசுவதையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.. "எங்களுடைய எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக ஏற்று கொள்ளுங்கள், அப்போதுதான் நாங்கள் உங்கள் கூட்டணிக்கு வருவோம்" என்று இவர்கள் பாஜகவுக்கு பயம் காட்டுகிறார்களாம். அல்லது எச்சரிக்கை விடுக்கிறார்கள்.. அல்லது கோரிக்கை விடுக்கிறார்கள்... இவ்வளவு பேசுகிறாரே சிவி சண்முகம், "முடிந்தால் எங்கள் எடப்பாடியை தொட்டுப்பார் பாஜகவே.. எங்கள் எடப்பாடியை தொட்டுப்பார் அமித்ஷாவே" என்று பேச சொல்லுங்களேன் பார்ப்போம்.. அதனால், எடப்பாடி தலைமையை ஏற்க வேண்டும் என்பதே சண்முகம் போன்றோரின் கோரிக்கையாக உள்ளது" என்று கேசி பழனிசாமி கூறியிருந்தார்..

 இன் அவுட்

இன் அவுட்

ஆனால், எடப்பாடி பழனிசாமி டீம் வேறு ஒரு கூட்டணி கணக்கில் உள்ளதாக சொல்கிறார்கள்.. அதாவது, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக, கடந்த 2 தேர்தல்களிலும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.. அதன்மூலம் கிட்டத்தட்ட 13 சதவீத சிறுபான்மையினர் அதிமுகவை விட்டு வெளியேறிவிட்டது.. எனவே, இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலேயே எடப்பாடி தரப்பு பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க துவங்கிவிட்டது என்கிறார்கள். இப்படி பாஜக உடனான கூட்டணி குறித்து 2 விதமான யூகங்கள் வட்டமடித்து வருகின்றன..

 தூண்டில் வலை

தூண்டில் வலை

ஆனால், எடப்பாடி ஆதரவாளர்கள் தரப்பிலேயே 2விதமான டீம்கள் உள்ளதுதான் மிகப்பெரிய தர்மசங்கடமாக எடப்பாடிக்கு நிற்கிறது.. ஜெயக்குமார், முனுசாமி, சிவி சண்முகம், என பலரும் பாஜகவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில், வேலுமணி, தங்கமணி போன்ற சீனியர்கள், பாஜகவுக்கான ஆதரவு அலையை வீசிவருகின்றனர்.. இதுவரை பாஜகவை எதிர்த்து இவர்கள் எந்த ஒரு பேட்டியையும் தராமல் உள்ளனர்.. எனவே, இந்த 2 டீம்களையும் எடப்பாடி எப்படி கையாள போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆக, எப்படி பார்த்தாலும், எடப்பாடிக்கு நேரடி டார்கெட் பாஜகதானே தவிர, ஓபிஎஸ் கிடையாது என்கிறார்கள்.. பாஜகவை கழட்டிவிட ஓபிஎஸ், தடைக்கல்லாக இருப்பார் என்பதாலேயே அவர் முன்கூட்டியே கட்சியில் இருந்து கழட்டிவிடப்பட்டார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணித்து சொல்கிறார்கள்.

சொல்பேச்சு

சொல்பேச்சு

அதற்கேற்றபடி, இப்போதுவரை ஓபிஎஸ், எந்த ஒரு சின்ன நகர்வையும் பாஜகவை கேட்காமல் செய்வதில்லையாம்.. இரட்டை இலை தனக்குதான் என்று தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பகிரங்கமாகவே அறிவிக்கும் அளவுக்கு ஓபிஎஸ் துணிகிறார் என்றால், இதற்கு பின்னால் பாஜகவின் தயவு இல்லாமல் இருக்காது என்கிறார்கள்.. பாஜக தந்த சமிக்ஞையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.. ஆனால், உலகிலேயே .ஒன்றிணைய வேண்டாம் என்று சொல்வர் பழனிசாமி மட்டுமே என்று சொல்லி, அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களின் மத்தியில் எடப்பாடியை டேமேஜ் செய்துள்ளார் ஓபிஎஸ்.

 தலைக்கு மேல் கத்தி

தலைக்கு மேல் கத்தி

விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்த போவதாகவும் சொல்லி உள்ளார். இப்படி நாலாபக்கமும் நெருக்கடிகள், குழப்பங்கள் சூழ்ந்து வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.. இதற்காகவே அவசர கூட்டம் ஒன்றை நாளை காலை நடத்த உள்ளார் எடப்பாடி.. கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், செய்தி தொடர்பாளர்கள் என மொத்த பேரையும் நாளை காலை 10:00 மணிக்கு, சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி..

 நெளிந்த எடப்பாடி

நெளிந்த எடப்பாடி

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை, தேர்தல் கூட்டணி என இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வராமல் பாதகமாக வந்தால் என்ன செய்வது? என்ற கிலி எடப்பாடி தரப்புக்கு கிளம்பி உள்ளதாக தெரிகிறது.. எனவே, இதுகுறித்து நாளைய தினம் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது... இந்த கூட்டத்தில் என்ன பேச போகிறார்கள் என்பதை ஓபிஎஸ் தரப்பு உற்றுநோக்கிவரும் அதேவேளையில், பாஜகவும் காதை தீட்டிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.. தலைக்கு மேல் ஏகப்பட்ட கத்திகள் தொங்கிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி என்னதான் செய்ய போகிறார்? பார்ப்போம்..!!

வெளுக்கும் சாயம்

வெளுக்கும் சாயம்

புத்தாண்டு தொடக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. அதனால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும், நாளைய தினம் ஆலோசனை மேற்கொள்ளலாம் என தெரிகிறது.. இந்த கூட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆலோசிக்கிறார்கள்... பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க உள்ளார்கள். இந்த கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகளை, பாஜக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், தவிர, திமுகவும் உற்றுநோக்கி வருகிறது.. உட்கட்சி விவகாரங்களை தாண்டி, எம்பி கூட்டணி தொடர்பான விவகாரங்கள் பேசப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது..

உரசல்கள்

உரசல்கள்

அதேபோல, எம்ஜிஆர் நினைவு நாள் பேரணியில் எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் கலந்து கொள்ளவில்லை.. அந்த கூட்டத்தையும் புறக்கணித்திருந்தார்.. மேலும் தனியாக சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால், எடப்பாடி தரப்புடன் சிவி சண்முகத்துக்கு உரசல்கள் அதிகமாகி உள்ளதாகவும் சலசலக்கப்பட்டு வருகிறது.. எனவே, நாளைய தினம் சிவி சண்முகம் இந்த கூட்டத்தில் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.. மேலும், பாஜக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ் தொடருவது குறித்தும் விவாதிப்பதற்காக, மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நாளை கூட்டியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இப்படி ஏராளமான எதிர்பார்ப்புகள் நாளைய தினம் அதிமுகவை எதிர்நோக்கி உள்ளன.

English summary
Are Edappadi Palanisamy supporters preparing for alliance against BJP and AIADMKs sudden emergency meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X