ரெடியா இருங்க.. சீனியர்களுக்கு குறி வெச்ச எடப்பாடி பழனிசாமி.. அப்படியே பம்மும் மாஜிக்கள்.. என்னவாம்?
எடப்பாடி பழனிசாமி பிளானுக்கு மறுப்பு சொல்லி உள்ளனர் முக்கிய நிர்வாகிகள்
சென்னை: மேயர் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், சில குழப்பங்களும் கட்சிக்குள் தலைதூக்கி உள்ளதாம்.!
தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடக்க உள்ளது.. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
ஆனால், அதன்பிறகு எடப்பாடி முதல்வராக இருந்தபோது மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடு நடத்தப்பட்டது.. ஆனால் அதற்குள், கொரோனா தொற்று பரவல் வந்துவிட்டதால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்த முடியாமல் போய்விட்டது.

அறிவிப்பு
இப்போது திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலும் நடக்க போகிறது.. ஆனால், நேரடி தேர்தலா? மறைமுக தேர்தலா என்பதில் குழப்பம் துவங்கியது.. தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் நேரடி தேர்தல் நடைமுறையே இருக்கிறது என்றாலும், இதை திமுக அரசு மாற்றிவிடுமோ என்ற கலக்கமும் அதிமுகவுக்கு உள்ளது..

திமுகவின் பிளான்
ஆனால், நகராட்சிகளின் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதுடன், ஓட்டுப்பதிவினையும் 2 கட்டமாக நடத்த தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது... ஒருவேளை அப்படி அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்பட்டால், மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடியாகவே இறங்கினால் சரியாக இருக்குமே? எதற்காக கூட்டணி கட்சியினரை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர்களுக்கு பதிலாக சொந்த கட்சியினருக்கு உள்ளாட்சி தலைவர்களுக்கான பதவிகளை வாய்ப்புகளை தந்தால், அது கட்சியின் பலத்தை பெருக்குமே என்ற யோசனையில் உள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி வியூகம்
அதேசமயம் அதிமுகவும் ஜரூர் வேகத்தில் தயாராகி வருகிறது.. நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் எப்போது அறிவிக்கப்படவிருக்கிறது என்பதை அதிமுக ஆதரவு அதிகாரிகள் மூலம் தகவல்களை பெற்று வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் தேதி அறிவிப்பின் அட்டவணையில் மனு தாக்கல் தொடங்கி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு தேதி வரை பெரிய அளவில் கால அவகாசம் இருக்காது என்றும், தேர்தலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் ஆயத்தமாக இருங்கள் என்றும் மட்டும் எடப்பாடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு
மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் முறையே அமலில் இருப்பதால், கட்சியில் வலிமையான நபர்களை குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் என பலரையும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வைக்க எடப்பாடியும், ஓபிஎஸ்சும் திட்டம் தீட்டி வருகிறார்களாம்.. ஆனால், எம்எல்ஏ, எம்பியாக இருந்தவர்கள் பலர், கவுன்சிலர் தேர்தலில் எப்படி நாங்கள் போட்டியிடுவது? என்று மறுத்து வருகிறார்களாம்.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக, சென்னையில் முன்னாள் எம்எல்ஏக்கள் விருகை ரவி, ஆதிராஜாராம், நட்ராஜ், முன்னாள் எம்.பி. வெங்கடேஷ்பாபு, மாவட்ட செயலாளர் ராஜேஷ், பாலகங்கா, முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் (மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகன்) போன்ற பலரும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட பம்முகிறார்கள் என்கிறது அதிமுக தரப்பினர்.. எடப்பாடி ஒன்று கணக்கு போட்டால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வேறு ஒரு கணக்கை போட்டு அதற்கு மறுத்து வருவதால், மீண்டும் அதிமுகவுக்குள் ஒரு புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறதாம்..!
-
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications