திமுகவுக்கே பிளஸ் பாயிண்ட்டாமே.. "காவி"யில் மூழ்குதா "இலை".. பிளேட்டை திருப்பினாரா எடப்பாடி பழனிசாமி?
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவுக்கு, அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள என்ன காரணம்? அரசியல் களத்தில் இதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும்?
"ஒரு நாடு ஒரே தேர்தல்" என்ற விவகாரம் மீண்டும் முளைத்துள்ளது.. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் என இரு தரப்பிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பாஜக அரசு இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால், தேர்தல் செலவு குறையும் என்று காரணம் சொல்லப்படுகிறது.. அத்துடன், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையானது வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.
என்ன காரணம்: மற்றொருபுறம் இதற்கு எதிர்ப்பு எழுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டுவந்தால், மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதாகிவிடும்.. தேர்தலுக்காக செலவுசெய்யப்பட்ட மக்களின் வரிப்பணமும் வீணாகும் என்பதால், இதை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள்.
எதிர்ப்பு: இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது.. இந்த திட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளது.. இதனால், தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படும் என்று நம்புகிறது..
கடந்த 2018ல், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் தொடர்பாக சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.. டெல்லியில் நடைபெற்ற சட்ட ஆணையக் கூட்டத்திற்கு சென்று, மூத்த தலைவர்கள் தம்பிதுரை, சிவி சண்முகம் இருவருமே பங்கேற்று, இந்த எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு வந்தார்கள். அத்துடன், 2024-ல் வேண்டுமானால் லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அப்போது மத்திய அரசை ஆதரிப்போம் என்றும் அதிமுக சொல்லிவிட்டு வந்தது.
ஆதரவு கரம்: ஆனால், நேற்று அதிமுக, இந்த திட்டத்துக்கு ஆதரவை வழங்கியிருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து சில அரசியல் விமர்சகர்களிடையே நாம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது:
"பாஜக பக்கம் மொத்தமாகவே எடப்பாடி சாய்ந்துவிட்டார்.. எதுக்கெடுத்தாலும், பாஜகவுக்கு ஓடோடி சென்று ஆதரவு ஓபிஎஸ்ஸோ இன்னும் இதுகுறித்து வெளிப்படையாக பேசவில்லை..
திமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவும், கொடநாடு விசாரணை விவகாரம் விஸ்வரூபமெடுத்துவிட்டதாலும்தான், பாஜக பக்கம் எடப்பாடி சாயும் சூழல் வந்துவிட்டது. இதனால், சிறுபான்மையினர் உட்பட பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள், இனி அதிமுகவுக்கும் அதிகமாகும்.. மேலும், பாஜகவுக்கு எடப்பாடி தந்திருக்கும் இந்த ஆதரவானது, திமுக வெற்றிக்கே உதவக்கூடும்.. அல்லது ஓபிஎஸ் மீதான நன்மதிப்பை கூட்டிவிடும்..
புரட்சி பயணம்: நாளைய தினம் ஓபிஎஸ், புரட்சி பயணத்தை துவங்க போகிறார்.. புது கட்சி துவங்க போவதாகவும் சொல்கிறார்கள். இந்த நேரத்தில், ஓபிஎஸ் மீதான கோபத்தை அதிகப்படுத்தி, தன் மீதான பாஜகவின் கவனத்தை திருப்புவதற்காகவே, எடப்பாடி பழனிசாமி, இந்த ஆதரவை தந்திருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், இப்படி நிலைப்பாட்டை மாற்றி கொண்டிருப்பதை, அதிமுக தொண்டர்களே விரும்ப மாட்டார்கள்
பலவிஷயங்களில் பாஜகவுடன் முரண்பட்டு நிற்கிறோம், அதிமுக கொள்கை வேறு, பாஜக கொள்கை வேறு என்றாரே எடப்பாடி பழனிசாமி? இதுதான் அதிமுகவின் கொள்கையா? பாஜகவை விட்டு ஓபிஎஸ் மெல்ல மெல்ல விலகி வருகிறார், ஆனால், எடப்பாடியோ, பாஜக ஆதரவாளராகவே மாறிவிட்டார். இதை அதிமுக தொண்டர்களும் கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள் " என்றனர்.
விவாதங்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை, சோஷியல் மீடியாவில் பலத்த விவாதத்தை கிளப்பிவிட்டுவருகிறது.. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு, 5 வருடங்கள் என்பதற்கான உத்தரவாதம் இருக்குமா? மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும், ஒரு கட்சி தன்னுடைய மெஜாரிட்டியை இழந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டு, தேர்தல் சுழற்சி வரும் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் சூழலை உருவாக்கிடுவது சரியா? என்றெல்லாம் விவாதங்கள் வலுத்து வருகின்றன.
அதுமட்டுமல்ல, 2024ல் எம்பி தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்து என்று முடிவானால், மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா? இதற்கு மற்ற மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளுமா? அல்லது மாநில அரசை, தேர்ந்தெடுத்த அந்தந்த மக்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? என்றெல்லாம் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications