சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் இணைவதா? வாய்ப்பில்லை ராஜா..நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி..அடுக்கிய காரணங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கட்சியில் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக பயணம் செய்வோம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த அழைப்பினை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார். ஏன் இணைந்து பணியாற்ற முடியாது என்பதற்கான பல காரணங்களையும் அவர் அடுக்கியுள்ளார்.

Recommended Video

    DMK-வுடன் இணைந்து செயல்பட்ட OPS உடன் இணைந்து செயல்பட முடியாது - EPS அறிவிப்பு

    ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதே விருப்பம் என்று கூறினார். நடந்த கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , "அதிமுகவை சிலர் தன்வசப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதிமுக இயக்கத்தை பலர் கொண்டு போக நினைக்கின்றனர். அதனை தடுக்கும் போதுதான் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதுதான் இப்போதும் ஏற்பட்டுள்ளது என்றார்.

    சிங்கப் பாதையை தேர்ந்தெடுத்த எடப்பாடி.. ஓபிஎஸ் ஆஃபருக்கு “நோ”! ஒரே குறிக்கோளில் உறுதி சிங்கப் பாதையை தேர்ந்தெடுத்த எடப்பாடி.. ஓபிஎஸ் ஆஃபருக்கு “நோ”! ஒரே குறிக்கோளில் உறுதி

    அதிகாரம் இல்லை

    அதிகாரம் இல்லை

    கடந்த 2017ஆம் ஆண்டு பொதுச்செயலாளருக்கு இணையான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், பொதுக்குழு உறுப்பினர்களினால் தேர்ந்தெடுப்பார்கள் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை. அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது என்றார்.

    அடிக்கடி அழைப்பு

    அடிக்கடி அழைப்பு

    ஓ.பன்னீர் செல்வம் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றாரோ அவர்களை அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைதான் அழைக்கிறார். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய அமைச்சாரகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை. எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைப்பவர் ஓபிஎஸ். ஆனால் கட்சியில் எந்த வேலையும் செய்ய மாட்டார்.

    ஒற்றைத்தலைமை

    ஒற்றைத்தலைமை

    ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம்.அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள் . தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். யார் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்பதை யாரும் குறிப்பிடவில்லை. யார் ஒற்றை தலைமை என கூறாத நிலையில் பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார். செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவிற்கு வந்திருக்கலாமே என்றும் கேட்டார்.

    திமுக உடன் உறவு

    திமுக உடன் உறவு

    கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான், திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். அவருடைய மகன் எம்.பியாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிறப்பாக செயல்படுவதாக சர்டிபிகேட் தருகிறார். அவருடன் எப்படி இணைய முடியும்? பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரம் தான், அவர் பதவிக்கு வரவேண்டுமென்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்வார். அவருடன் எப்படி இணைய முடியும்?

    கட்சி விரோத நடவடிக்கை

    கட்சி விரோத நடவடிக்கை

    இப்போது எந்த அடிப்படையில் இணைப்பு பத்தி பேசுகிறார்?. அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீதி தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

    தொண்டர்கள் மனநிலை

    தொண்டர்கள் மனநிலை

    அதிமுகவின் பெரும்பான்மை தொண்டர்கள், மக்கள் என்ன நினைக்கிறார்களே அதை பிரதிபலிக்க வேண்டும்
    கட்சியில் எந்தவேலையும் செய்ய மாட்டார் ஆனால் எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பார் ஓ.பன்னீர் செல்வம். எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி அழைப்பு விடுப்பார். தானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

    அதிமுக விதிகளில் திருத்தம்

    அதிமுக விதிகளில் திருத்தம்

    பொதுச்செயலாளருக்கு சமமாக இரட்டை பதவிகள் கொண்டு வரப்பட்டு விதிகளில் திருத்தப்பட்டன. ஒற்றைத்ததலைமை என்பதே அதிமுகவின் விருப்பம். யார் ஒற்றைத்தலைமைக்கு வரவேண்டும் என்று யாரும் கூற வில்லை. அதற்குள் அவர் வழக்கு தொடர்ந்தார். நீங்கள் பொதுக்குழுவிற்கு வந்து கருத்து கூறியிருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    நிராகரிப்பு

    நிராகரிப்பு

    கட்சியில் உயர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அநாகரீகமான முறையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி இணைய முடியும். கட்சிக்கு சோதனை வந்த போதெல்லாம் நாங்கள்தான் முன்னின்றோம். 1989ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவை தன்வசப்படுத்த நினைப்பவர்களுடன் ஒருபோதும் இணைய முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். இதன்மூலம் ஒன்றிணைந்து செயல்பட பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

    English summary
    Edappadi Palanisamy press meet against O.Panneerselvam: (ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கையை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி, நிராகரிப்பிற்கு கூறிய காரணங்கள்)Edappadi Palanisamy said that O. Panneer Selvam, who was involved in anti-party activities, had no chance of getting involved. Edappadi Palanichami rejected O. Panneer Selvam's invitation to travel together in the party. He also lays down many reasons why we cannot work together.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X