இத்தனை நாள் சைலண்டாக இருந்தது.. இதுக்குத்தானா? தூக்கியடிக்க போகும் எடப்பாடி.. அரண்டு போன அதிமுக?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெரிதாக ஊடகங்களில் தோன்றுவது இல்லை. அதுமட்டுமின்றி வெளியே வந்து கட்சி நிர்வாகிகளையும் கூட சந்திப்பது இல்லை. பெரும்பாலும் அவர் வீட்டிற்கு உள்ளேயேதான் இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி வெளியே வரவில்லை: இதையடுத்து எடப்பாடி பழனிசாமி எங்குமே வெளியே வரவில்லை. கடந்த 29ம் தேதி தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர்கள் சார்பில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால் இந்த போராட்டங்கள் எதிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. சேலத்தில் நடக்கும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
உடல்நிலை, லிஸ்ட் மாற்றம்: இது எல்லாம் நடந்த போதும் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை வீட்டை விட்டு கூட வெளியே வரவில்லை. அவர் ஏன் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார். ஏன் செய்தியாளர்களை கூட சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு உடல் வலியும் கடுமையாக உள்ளது. இதனால் அவர் சிகிச்சை எடுப்பதற்காக ஓய்வு எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் வீட்டில் ஓய்வில் இருந்த எடப்பாடி அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுத்துள்ளாராம். வீட்டில் இருந்தபடியே முக்கிய லிஸ்ட் ஒன்றை அவர் எடுத்துள்ளாராம். நீக்க வேண்டிய மாவட்ட செயலாளர்கள் லிஸ்டை எடுத்து உள்ளாராம்.
முக்கியமாக திமுகவுடன் நெருக்கமாக இருப்பவர்கள், கட்சி பணிகளை சரியாக செய்யாதவர்கள், செல்வாக்கு இல்லாதவர்கள், காசு இல்லாதவர்கள் ஆகியோரை தூக்கி அடிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். இதற்கான லிஸ்டையும் அவர் ரெடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
முக்கியமாக தென் மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருப்பவர்களை தட்டி தூக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்துக்கொண்டே இந்த லிஸ்டை எடப்பாடி எடுத்து இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications