எடப்பாடி, அண்ணாமலைக்கும் திமுக அரசு அழைப்பு.. ஆகஸ்ட் 18ஆம் தேதி வர்றாங்களா? பெரும் எதிர்பார்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

Edappadi and Annamalai have been invited to participate in Karunanidhi Coin Release Ceremony

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 12 12 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

கருணாநிதி நினைவு நாணயத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி' என்ற பெயருடன், 'தமிழ் வெல்லும்' என தமிழில் எழுதப்பட்ட வாசகம் கருணாநிதி நினைவு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் என பலர் பங்கேற்க உள்ளனர். மேலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நாணயத்தை வெளியிட உள்ளதால் இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+