சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்னம் போனால் போகட்டும்.. பாஜகவிற்காக காத்திருக்க முடியாது! துணிச்சலாக வேட்பாளரை அறிவித்த எடப்பாடி!

பாஜக முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும், அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறிய நிலையில், அதே பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்து உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் முடிவிற்காக காத்திருக்காமல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி துணிச்சலாக அறிவித்துள்ளார்.

சின்னம் கிடைக்குமோ கிடைக்காதோ.. ஓபிஎஸ் வேறு வேட்பாளரை நிறுத்துவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.. பாஜக ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை.. பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளது.. தொண்டர்கள் சிதறிவிட்டனர்.. அமமுக வேட்பாளரை நிறுத்திவிட்டது.. கூட்டணியில் இருந்த பாமக யாருக்கும் ஆதரவு இல்லை.. தேமுதிக ஒரு பக்கம் நிற்கிறது.. இதெல்லாம் போக திமுக - காங்கிரஸ் கூட்டணி அசுர பலத்துடன் இருக்கிறது.. இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி வேறு தனது தரப்பு வேட்பாளரை நிறுத்த போகிறாரா என்ற கேள்வி நிலவி வந்தது!

அந்த கேள்விக்கு.. ஆம் நிறுத்த போகிறேன் என்று பதில் அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இதுலருந்தே தெரியுதே.. “தோல்வி பயம்”.. இடைத்தேர்தல்: பாஜக குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ்!இதுலருந்தே தெரியுதே.. “தோல்வி பயம்”.. இடைத்தேர்தல்: பாஜக குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ்!

சின்னம் சிக்கல்

சின்னம் சிக்கல்

முன்னாள் எம்எல்ஏ தென்னரசை அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளார் இபிஎஸ். ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவோம் என்ற எடப்பாடியின் உறுதித்தன்மையை இது காட்டுகிறது. ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஒரு வேட்பாளரை போட்டிக்கு களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது. அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணையாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.

சின்னம் முடக்கம்

சின்னம் முடக்கம்

அதோடு இதில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பதில் அளித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் முடிவு வராமலே எடப்பாடி துணிச்சலாக சின்னம் பற்றி கவலையின்றி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துவிட்டார்.

பாஜக சப்போர்ட்

பாஜக சப்போர்ட்

இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் இந்த பொதுக்குழு வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது அதிமுக பொதுக்குழு வழக்கில் ஒரு தீர்ப்பு வந்து அந்த தீர்ப்பை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த தீர்ப்பை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளருக்கு சிக்கல் இருக்காது. ஆனால் அதை பற்றி எல்லாம் எடப்பாடி கவலைப்படவில்லை. சுயேச்சை சின்னம் கொடுத்தாலும் பரவாயில்லை என்று எடப்பாடி துணிச்சலாக இறங்கி உள்ளார்.

பாஜக சப்போர்ட்

பாஜக சப்போர்ட்

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் வேட்பாளரை களமிறக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் பாஜக தரப்பு போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் தெரிவித்து உள்ளது. அதாவது ஓ பன்னீர்செல்வம் தரப்பு பாஜக முடிவிற்காக காத்து இருக்கிறது. ஆனால் பாஜக வேட்பாளரை அறிவிக்குமா? என்ன முடிவு எடுக்கும்? யாரை ஆதரிக்கும் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி யோசிக்கவே இல்லை. அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்துள்ளார். பாஜக முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும், அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை என்று பாஜக நாராயணன் திருப்பதி நிலையில், அதே பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்து உள்ளார்.

English summary
Edappadi Palanisamy did not worry about two leaves or BJP stand, Bravely announced AIADMK Erode East by-election candidate?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X