திமுகவுக்கு முட்டு கொடுக்கிறார் எடப்பாடி! எஸ்பி வேலுமணி ஒதுங்கி இருக்க இதுவே காரணம்.. நிர்மல் குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு முட்டு கொடுக்கிறார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். இப்படி திமுகவுக்கும், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கும் உழைத்தால் உங்களோடு யார் பயணிப்பார்கள் என்ற நிர்மல் குமார், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் போன்றோர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கும் இதுதான் காரணம் எனவும், இந்த கட்சியை குழி தோண்டி புதைக்காமல் அவர் மாறமாட்டார் என்றும் பேசியுள்ளார்.

திமுகவும் அதிமுகவும் நல்ல ஆட்சியை கொடுத்தது என எடப்பாடி பழனிசாமி நேற்று பேசிய நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.

Edappadi is propping up the DMK This is the reason why SP Velumani has stepped aside - Nirmal Kumar

திமுகவுக்கு முட்டு கொடுக்கிறார் எடப்பாடி

தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார். நிர்மல் குமார் கூறியதாவது:-

பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசும் உதயநிதி ஸ்டாலின் பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும். உதயநிதி கடைசி வரை கத்துக்குட்டிதான். அதிகாரத்தில் இருந்து இதுவரைக்கும் எதுவும் பண்ணவில்லை. திமுகவும் அதிமுகவும் நன்றாக ஆட்சி புரிந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கடைசி காலத்தில் என்ன செய்கிறார். திமுகவுக்கு முட்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

ஜெயலலிதா இருந்தால் இப்படி கேப்பார்களா?

அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா? இல்லை திமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா? என்று தெரியவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தாரோ.. அதை விட மோசமாக திமுக இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதை கேக்க துப்பு இல்லை. ஜெயலலிதா இருந்தால் இப்படி கேப்பார்களா? புரட்சி தலைவர் எம்ஜிஆர் இருந்தால் இப்படி செய்வார்களா?, இந்த கட்சியில் இருந்து ஏன் ரிசைன் பண்ணினாங்க என எடப்பாடி கேட்கிறார். நீங்க திமுகவுக்கு முட்டு கொடுத்தால் உங்களுடன் யார் பயணிப்பார்கள்?

திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கு நீங்க உழைத்தால் உங்களுக்கு யார் உங்களோடு சேர்ந்து பயணிப்பார்கள்.. உங்களுடைய சொத்தை, உங்களுடைய குடும்பை சொத்தை காப்பாற்ற நீங்க இருக்கும் போது உங்க கூட இருந்த தலைவர்களும் கட்சியை விட்டு விலகுவதற்கும், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் போன்றோர் ஒதுங்கி இருக்கிறார்கள்.

திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இருந்து நல்ல ஆட்சியை நடத்தினார் என்று சொல்கிறார். இப்படி பேசினால் யார் உங்களுடன் பயணிப்பார்கள். இந்த கட்சியை குழி தோண்டி புதைக்காமல் அவர் மாறமாட்டார்.

அதிமுகவை குழி தோண்டி புதைக்காமல் இவர் மாறமாட்டார். கம்யூனிஸ்ட் கட்சி எங்களுக்கு இக்கட்டான நேரத்தில் ஆதரவு கொடுத்தது. ஆர்டிஐ விவகாரத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சங்கடங்கள் ஏற்பட்டால் முதல்வரிடம் எடுத்து செல்வோம்" என்றார்.

திமுகவும், அதிமுகவும் நல்ல அரசாக செயல்பட்டது

ஒரு அரசு சிறப்பாக செயல்பட எல்லா ஆட்சியிலும் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள். திறமையாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர், துறை செயலாளர்களை ஆலோசகர்களாக நியமிப்பார்கள். அவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் பல் ஆண்டுகள் அனுபவம் இருப்பதால், அரசுக்கு என்ன மாதிரியான ஆலோசனை கொடுக்க வேண்டும் என அவர்களுக்கு தெரியும். அதன்படி அரசும் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கும். ஆனால் தவெக ஆட்சியில் ஒரு ஜோதிடரை அரசு ஆலோசகராக நியமிக்கிறாங்க.

தேர்தல் நேரத்தில் முதல்வருக்கு உதவியாக இருந்த, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டியை நியமித்து இருக்கிறார்கள். ஒரு துறையை சேர்ந்த அதிகாரியாக இருந்தால், அவருக்கு எந்த இடத்தில் என்ன தேவை என்பதை அறிவார். அதற்கேற்ப ஆலோசனையும் வழங்குவார். இது எல்லாம், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எனக்கு தெரியும். அப்படித்தான் அதிகாரிகளை நியமித்து ஒரு நல்ல அரசாங்கமாக செயல்பட்டது. திமுக ஆட்சியும் சரி.. அதிமுக ஆட்சியும் சரி.. அப்படித்தான் நல்ல அரசாங்கமா செயல்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+