ரொம்ப ஓவரா போறீங்கடா.. எடப்பாடி பழனிசாமிக்கு உம்மா கொடுத்த அதிமுக வேட்பாளர்
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிக்க அதிமுக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குட்டி குட்டி ரியாக்ஷன்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் பிரச்சாரத்தின்போது, அதிமுக வேட்பாளர் ஒருவர் எடப்பாடிக்கு வலுக்கட்டாயமாக உம்மா கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம், வியூகங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரச்சார களத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு வியூகத்தை கடைபிடிப்பார்கள். வாக்காளர்களை கவர்வதற்காக நூதன பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். வேட்பாளர்களை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்கள், மூத்த தலைவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

சாக்லேட் பரிசு
பெரிய தலைவர்கள் பிரச்சாரம் செய்யம்போது, சில வேட்பாளர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். சில வேட்பாளர்கள் மகிழ்ச்சியில் அவர்களுடன் செல்பி எடுப்பார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரச்சாரம் செய்து வருகிறார். திரு.வி.க நகர் அதிமுக கூட்டணி வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், எழும்பூர் அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
பொற்கொடி, அபிஷேக் இருவரும் எடப்பாடியின் பிரச்சார வாகனத்தில் ஏறினார்கள். இரண்டு வேட்பாளர்களும் எடப்பாடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமியும் அவர்களுக்கு மரியாதை செய்தார். பொற்கொடி அமைதியாக இருக்க அபிஷேக் செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை. எடப்பாடியாருக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு, ஒரு சாக்லேட் பரிசாக கொடுத்தார்.
உம்மா
திடீரென எடப்பாடி பழனிசாமியின் இடது கையை பிடித்து இரண்டு அபிஷேக் முத்தம் கொடுத்தார். எடப்பாடி சிரித்துக் கொண்டே அவர் மீது பாசமாக கை போட்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அபிஷேக் செல்லமாக அவரின் கன்னத்தை பிடிக்க போக, எடப்பாடி அவரின் கையை பிடித்து தடுத்துவிட்டார். அதனுடன் நிற்காத அபிஷேக் எடப்பாடி பழனிசாமியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஒரு நிமிடம் ஜர்க் ஆன எடப்பாடி பழனிசாமி, பிறகு சிரித்து கொண்டு பிரச்சாரம் செய்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ரைவரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications