வைகோவுக்கு தோள் கொடுத்த கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இரங்கல்!
சென்னை: மதிமுக ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதிமுகவின் முன்னாள் பொருளாளரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி இன்று அதிகாலை உயிரிழந்தார். தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கணேசமூர்த்தி.

கணேசமூர்த்தி மாணவப் பருவத்திலேயே திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர். அந்த ஈடுபாட்டின் காரணமாக, ஏராளமான பணிகளை சிறப்பாக செய்ததன் மூலம் மாநில மாணவரணி துணை அமைப்பாளர், ஈரோடு மாவட்டச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்தார். 1993-ல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர்.
வைகோ, மதிமுகவை உருவாக்கியபோது அன்று அவருடன் இருந்த பல தலைவர்கள், இன்று கட்சியை விட்டுப் பிரிந்து பல்வேறு கட்சிக்குப் போயிருந்தாலும், அப்போதிருந்து தற்போது வரை அவர் கூடவே இருந்த போர்ப்படைத் தளபதியான கணேசமூர்த்தி மரணமடைந்திருப்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்: ஈரோடு தொகுதி மதிமுக எம்.பி கணேசமூர்த்தியின் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஈபிஎஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், "ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ.கணேசமூர்த்தி அவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன்.
அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை இரங்கல்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
கணேசமூர்த்தி அவர்கள் குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" எனத் தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா இரங்கல்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். திராவிட இயக்க கொள்கையால் ஈர்க்கப்பட்டு களப்பணிகளில் முன்னணியில் இயங்கியவர். பொடா வழக்கு பெற்று சிறை சென்று மீண்டவர்.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர். ஈரோடு தொகுதியின் வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டவர். அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மதிமுகவின் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications