சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளில் இனி குழாயடி சண்டை இல்லை.. விரைவில் வீடு தேடி வரும் பொருட்கள் .. தமிழக அரசு அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு 3501 நகரும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110ஆவது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வகையில் 3501 நகரும் நியாய விலைக் கடைகள் ரூ 9.66 கோடியில் தொடங்கப்படும்.

 Edappadi Palanisamy announces that 3501 mobile ration shops to be installed

105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு 27 கோடி ரூபாயில் சொந்த அலுவலக கட்டடங்கள் கட்டப்படும். 14.75 கோடி ரூபாய் மதிப்பில் 95 கூட்டுறவு நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும். சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மஞ்சக்குட்டை ஊராட்சி செம்மடுவு கிராமத்தில் 15 கோடியில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்னை, தண்டையார்பேட்டையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள இடத்தில் 5.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள மற்றொரு இடத்தில் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் 2 திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

 Edappadi Palanisamy announces that 3501 mobile ration shops to be installed

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வேளாண் பெருமக்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பதப்படுத்தி சேமித்து வைத்திடும் வகையில், 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

விவசாயிகளின் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கும் வகையில், 90.35 லட்சம் கால்நடைகளுக்கு 22.03 கோடி ரூபாயில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும் என அறிவித்தார்.

English summary
CM Edappadi Palanisamy announces that 3501 mobile food supplies shop to be installed at Rs 9.66 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X