ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலில் தற்போதுவரை எடப்பாடி பழனிசாமி திட்டங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. விரக்தியில் அவர் ஜோதிடரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் எடப்பாடி வியூகங்களை மாற்றி களத்தில் வேகம் காட்டவுள்ளாராம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி சவால்
தவெக வருகையால் திமுக அதிருப்தி வாக்குகள் பிரிந்து அதிமுக பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. திமுக 23 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துவிட்டார். அதிமுகவில் எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த தேமுதிகவை கூட தக்க வைக்க முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் என பல சீனியர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.
செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் உள்கட்சி பிரச்சனையும் உச்சத்தில் இருக்கிறது. பாஜகவும் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. கூட்டணி, தேர்தல் வாக்குறுதி என எடப்பாடி ஏவிய அம்புகள் எல்லாமே புஸ்வானமாகி வருகிறது.
ஜோதிடர்கள் அறிவுரை
இதில் விரக்தியான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை, வியூகங்களில் மாற்றங்களை செய்ய சொல்லி அட்வைஸ் செய்துள்ளார்களாம். அதனடிப்படையில் தான் அதிமுக ஆட்சி மன்றக் குழுவையும் மாற்றி அமைத்துள்ளாராம். எடப்பாடி தலைமையிலான குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, வேணு கோபால், ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, வளர்மதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தம்பிதுரை தலைமையில் தேர்தல் பிரச்சார பணிகள் குழு, சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் விளம்பர குழு, தங்கமணி, ஜெயகுமார் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கண்டக சனி
தற்போது சனிப்பெயர்ச்சி முடிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கண்டக சனி நடைபெற்று வருகிறது. இதனால் சிறிய தவறுகள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஜோதிடர்கள் ஆலோசனை ஏற்று வரும் நாட்களில் எடப்பாடியின் செயல்பாடுகளில் மேலும் பல மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications