அன்புமணி ரா... பேசிக்கொண்டு இருக்கும் போதே.. சட்டென 1 நொடி நிறுத்திய எடப்பாடி.. ஏன் தெரியுமா?
சென்னை: மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நடக்கும் என்.டி.ஏ கூட்டணி கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த மேடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகத் தோன்றவுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அதிமுக - பாஜக கைகோர்த்துள்ளன. இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), அமமுக (T.T.V. தினகரன்), தமாகா (ஜி.கே. வாசன்), ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 21, 2026 அன்று டி.டி.வி. தினகரனின் அமமுக இக்கூட்டணியில் இணைந்தது. இன்று மதுராந்தகத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் இக்கூட்டணி தனது பலத்தைக் காட்டி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது மதுராந்தகம். சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குச் சான்று. பிரதமர் மோடி இந்த மண்ணிலே கால் வைத்தவுடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. மதுராந்தகமே குலுங்கும் அளவு மக்கள் வெள்ளம்.
மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது மதுராந்தகம். சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குச் சான்று.
மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசு. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டப்படலாமா. மக்கள் விரோத ஆட்சி தேவையா என எடப்பாடி பழனிசாமி கேட்டதும் இல்லை இல்லை என கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆள வேண்டுமா. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் திமுகவுக்கு இறுதித் தேர்தல். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்
தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தந்தவர் மோடி தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். 2026 இல் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்குப் பின் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர், என்றுஎன்று மதுராந்தகம் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அன்புமணி
இந்த நிகழ்வில் வரிசையாக தலைவர்கள் பெயரை சொல்லும் போது அன்புமணி பெயரை அன்புமணி ரா.. என்று கூறிவிட்டு நிறுத்தி பின்னர் தொடர்ந்து பேசினார். ராமதாஸ் என்ற பெயரை இவர் தவிர்த்தார். அன்புமணி பெயரில் ராமதாஸ் பெயரை பயன்படுத்த ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அவரின் மனதை புண்படுத்த கூடாது என்பதால்.. அன்புமணி பெயரில் ராமதாஸ் பெயரை பயன்படுத்தாமல் மோடி பேசினார்.
மோடி பேச்சு
இந்த நிகழ்வில் பேசிய மோடி, ஏரி காத்த ராமனின் திருவடிகளை வணங்குகிறேன். எம்ஜிஆர் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினோம். போராடிய வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். இந்திய விடுதலைக்காக நேதாஜியுடன் பலர் போராடினர். தமிழர்களின் நாடி நரம்புகளில் வீரம், நாட்டுப்பற்றுள்ளது. ஆட்சி மாற்றத்துக்கு தமிழகம் தயாராகிவிட்டது.
மக்கள் வெள்ளம்போல இங்கு கூடியுள்ளனர். தேஜ கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழகம் தயாராகிவிட்டது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடக்கம். மேடையில் உள்ள தலைவர்கல் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்.
தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications