என்னாது எடப்பாடியார், சி.வி.சண்முகம் அதிமுகவிலிருந்து நீக்கமா?.. ஓபிஎஸ் தரப்பு போஸ்டரால் பரபரப்பு!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கம் என மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்றும் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் கூறி வருகிறார்கள்.
ஆனால் ஓபிஎஸ்ஸை காட்டிலும் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவு அதிகம். இந்த நிலையில் ஓபிஎஸ் டெல்லி சென்றது, அவருக்கு தேனியில் காவித் துண்டு அணிவித்தது போன்றவற்றால் ஓபிஎஸ் மீது எடப்பாடி தரப்பு கடுங்கோபத்தில் இருக்கிறது.

ஓபிஎஸ் பொருளாளர்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவது அல்லது அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்குவது உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேல் நமது அம்மா நாளிதழில் இருந்து நிறுவனர் என்ற இடத்தில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமை
இதுகுறித்து கேட்டால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் துரோகி என்றும் ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழுவை கூட்டக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு சொல்கிறது. கூட்டியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சொல்கிறது.

போட்டி போஸ்டர்
ஓபிஎஸ் புகைப்படத்தை எடப்பாடி தரப்பினர் கிழித்து வருகிறார்கள். அது போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். அது போல் ஓபிஎஸ்தான் பொதுச் செயலாளர். எடப்பாடி பழனிச்சாமிதான் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்
இந்த நிலையில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் என்றும் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் மிசா செந்திலின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications