ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானம் இன்று இறுதியாகிறதா? நீதிமன்ற கதவை தட்டுகிறாரா ஓபிஎஸ்?
சென்னை: ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்று இறுதி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி தரப்பினர் பிடிவாதம் காட்டி வருகிறார்கள். இதனால் அதிமுகவில் கடந்த 8 நாட்களாக சலசலப்பு எழுந்தது. கடந்த 18ஆம் தேதி அடிதடி மோதலும் நிகழ்ந்தது.
இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடிதம்
இப்படி ஏதாவது நடக்கும் என தெரிந்ததாலேயோ என்னமோ தெரியவில்லை, ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அசாதாரண சூழல் நிலவுவதாலும் கட்சியின் மூத்த முனனோடிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்காததால் அவர்கள் வருந்துவதாலும் பொதுக் குழுவை தள்ளி வைக்கலாம் என கடிதத்தில் எழுதியிருந்தார்.

மூத்த முன்னோடிகள்
ஆனால் இந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டாம் என்று சொன்னதே ஓபிஎஸ்தான் என்றும் திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்தார்.

தனித்தீர்மானம்
ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானம் குறித்து ஓபிஎஸ் தரப்பு கூறுகையில் ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து இல்லாமல் தனித்தீர்மானத்தை எடப்பாடி தரப்பு நிறைவேற்ற முடியாது. அதுதான் அதிமுகவின் சட்டவிதி. மேலும் 3 மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதும் விதி என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் இறுதி வடிவம்?
இந்த நிலையில் ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானத்தை இன்று இறுதி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தலைமைக்கான தனித்தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு இன்று இறுதி செய்கிறது. இதையடுத்து இது நாளை மறுதினம் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது. எனவே ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications