Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூஸ்ட் மோடில் எடப்பாடி.. ஒரே சஸ்பென்சா இருக்கே! திமுக கூட்டணி கட்சிகள் மீது ஒட்டுமொத்தமாக அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி முறிந்த பிறகு, திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் சில அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் மொத்த திமுக கூட்டணி கட்சிகளையும் விமர்சித்து உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பாஜகவுடன் அமைத்திருந்த 5 ஆண்டுகால கூட்டணியை கடந்த சில நாட்களுக்கு முன் முறித்துக்கொள்வதாக அறிவித்தது அதிமுக. இதற்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே வரவேற்பு தெரிவித்தன. அதே சமயம் திமுக மீது கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி இருப்பதாகவும் இதனால் அக்கட்சியில் அதிமுக கூட்டணிக்கு தாவலாம் என்றும் பேசப்பட்டது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் அதிமுக கூட்டணியில் இணையும் என்றெல்லாம் தகவல் பரவியது. ஆனால், அக்கட்சியின் வன்னி அரசு அந்த கணிப்புகள் தவறு என்றார்.

Edappadi Palanisamy condemn All DMK alliance parties in a statement

இந்த அனைத்து திமுக கூட்டணி கட்சிகளையும் பொதுவாக விமர்சித்து உள்ளார் எடப்பாடி பழனிசாமி. நேற்று முந்தினம் அவர் அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படுவதாக அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில், "தற்போது நடைபெற்று வரும் விடியா தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 28 மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை ஒரு புதிய பேருந்தைக்கூட வாங்கவில்லை. குறிப்பாக, எங்கள் ஆட்சியின் இறுதியில் அதாவது பிப்ரவரி 2021-ல், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 3,324.

விடியா திமுக ஆட்சியில் 30.9.2023 அன்றைய நிலவரப்படி இயக்கப்படும் பேருந்துகள் சுமார் 2,600 மட்டுமே. குறைந்த அளவு பேருந்துகளே இயங்கும் நிலையில் உள்ளதால், பல பேருந்து சேவைகளை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு நிறுத்தியுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவு பழைய, பழுதடையக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகளையே இயக்குவதால் நகரப் பகுதிகளில் மகளிர் தங்களது தினசரி வேலைக்குச் செல்லும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே துவங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

30.9.2023 அன்றைய தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இதன்மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கெனவே, கடந்த ஜூலை மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் ஊழியர்களை அமர்த்த முயற்சித்த விடியா திமுக அரசை எதிர்த்து அனைத்து போக்குவரத்து சங்கங்களும் ஆர்ப்பாட்டம் செய்தன.

நானும், இந்த விடியா திமுக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, நேரடியாகத் தொழிலாளர்களை நியமிக்க வலியுறுத்தினேன். ஆனால், தொழிலாளர் துரோக விடியா திமுக அரசு, அனைவரது எதிர்ப்பையும் மீறி சுமார் 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இந்த விஷயத்தில், திமுக-வின் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி மவுனம் காக்கின்றன." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+