முதலமைச்சர் இப்படியா பேசுவது.. மேகதாது விவாகரம்.. சிவகுமாரை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகா மேகதாது அணை விவகாரம் மீண்டும் விவகாரமாகியுள்ளது. யாராலும் மேகதாது அணையை தடுக்க முடியாது என்று கர்நாடகா முதலமைச்சர் சிவகுமார், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசினார். இதற்கு தமிழக காங்கிரஸ் உள்பட கண்டனம் தெரிவித்தனர். ஆனால் யார் எதிர்த்தாலும் கவலையில்லை என சிவகுமார் பதிலளித்தார். இரு மாநில மக்களிடையே ஒ வேற்றுமையை உண்டாக்கும் வகையில் சிவகுமார் பேசியதை கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் 'மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை. மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை. அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே ஒரு வேற்றுமையை உண்டாக்கும் விதமாக ஒரு மாநில முதலமைச்சர் இவ்வாறு பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

Edappadi palanisamy

அதிமுக சட்டப்போராட்டங்கள்

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.

பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

சட்டத்தை மதிப்பவர் போல நாடகம்

கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிடக்கூறும் உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆனால் கர்நாடக முதல்வர் சமீப காலமாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மேகதாதுவில் அணை அவசியம் என்று சட்டத்தை மதிப்பவர் போல் பொது வெளியில் பேசிவருகிறார். தற்போது மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது.

வேறு வழியின்றி வரும் வெள்ள உபரிநீரும், கர்நாடக அணைகளின் எல்லைகளை தாண்டி கர்நாடக-தமிழ்நாடு எல்லைகளில் பெய்யும் மழைநீரும்தான் வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நமக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில்லை. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் மழைநீரையும், வெள்ள உபரிநீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தற்போது பேசி வருகிறார்.

விஜய்க்கு வலியுறுத்தல்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயப் பணிகளுக்கும், 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்குநீரை வாதாடி பெறாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேககாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதுடன், 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் கேள்விக்குறியதாகிவிடும் நிலை ஏற்படும்.

நாளை டெல்லி செல்லும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி,மல்லிகார்ஜுன கார்கே
ஆகியோரிடம் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தமிழகத்திற்கு எதிராக பொது வெளியில் பேசி வருவதை எடுத்துக்கூற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றும்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வபோது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுகளை நடைமுறைபடுத்த அழுத்தம் தரவேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+