நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்.. உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: நீங்கள் நலமா என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே நாங்கள் நலமாக இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு. வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை எனவும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நீங்கள் நலமா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பயனாளிகளிடம் உரையாடினார். தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்கள், கோரிக்கை மனு அளித்து அதன் மூலம் பலன்பெற்றவர்கள், காத்திருப்பவர்கள் என அனைவரையும் உணர்ச்சிப் பூர்வமாக அணுகுவதே 'நீங்கள் நலமா?' திட்டம்.

இன்று நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கி வைத்து தனலட்சுமி என்ற பெண்ணிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின். மகளிர் உதவித்தொகை கிடைக்கிறதா?அந்த பணத்தை முழுவதுமாக செலவு செய்கிறீர்களா? ஏதாவது சேமிக்க முடிகிறதா என்றும் கேட்டார்.
மக்களை நோக்கி இனி அரசு வரும்... மக்களின் நலனை அறிய அரசு காது கொடுக்கும்..." என்ற முழக்கத்தை பிரதானமாக வைத்து இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் உங்கள் ஆட்சியில் நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
இதுதொடர்பான எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், "நீங்கள் நலமா" என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடிய ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!" என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கார்டூன் படத்தில், "பணி நிரந்தரம் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, முதியோர் ஓய்வூதியம் இல்லை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, நீட் ரத்து இல்லை, தாலிக்கு தங்கம் இல்லை மற்றும் மடிக்கணினி இல்லை" என்ற வாசகங்களுடன், #நாங்கள் நலமாக இல்லை - ஸ்டாலின் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் நலமா என முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கிவைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக சாடி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications