லோக்சபா தேர்தல் வியூகம்.. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி பரபர ஆலோசனை.. யாருடன் கூட்டணி
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பூத் கமிட்டிகளின் பணிகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பூத் கமிட்டி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டு காலமாக எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே அதிகார போட்டி தொடர்பான வழக்குகள் நடந்து வந்தது. கட்சியை முழுவதுமாக தன்வசப்படுத்தி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூகம் குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவரும் முடிக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி!












Click it and Unblock the Notifications