சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டது.. எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
சென்னை: தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் சொன்ன நிலையில், நேற்று மாலையே சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் பா.ஜ.க நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு ட்விட்டரில் திமுக அரசை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும் அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் இது அப்பட்டமாக காட்டுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொலைநகரம்
தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துகளை முடக்குவதிலேயே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது" என நேற்று ட்வீட் செய்திருந்தார்.

பாஜக பிரமுகர் கொலை
இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவரான பாலச்சந்தர் (34) அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
பாலச்சந்தரை வெட்டிக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலச்சந்தர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பாதுகாப்புக்கு காவலர் கேட்டதால் அவருக்கு பாதுகாப்பு காவலர் வழங்கப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் பாலச்சந்தர் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு வருவதாக சென்றபோது பாதுகாப்பு காவலர் டீ குடித்துவிட்டு வருவதாக பாலச்சந்தரிடம் கூறிவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போதுதான் பாலச்சந்தரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து, தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும் அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications