Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பெரிய காமெடி பண்ணிட்டாரு.. பெரிய வீழ்ச்சியாமே.. முக்கிய பாயிண்டை போட்டு உடைத்த எக்ஸ்பர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு சாதி ரீதியாக எதிர்ப்பு உள்ளது. அவரின் சமூகத்தை தவிர மற்ற சமூக மக்கள் கடுமையாக அவரை எதிர்க்கின்றனர். முக்குலத்தோர் எதிர்ப்பு, கொங்கில் உள்ள மற்ற ஜாதியினர் எதிர்ப்பு என்று பல சாதி எதிர்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2 வாரம் முன் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

Edappadi palanisamy did a blunder with his alliance formation in Tamil Nadu says Raveendran Duraisamy

இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், லோக்சபா தேர்தலில் திமுக அணிக்கு சாதகமாக களம் இருக்கிறது. அமித் ஷா 400 சீட் டார்கெட் செய்கிறார். இதற்காக தமிழ்நாட்டில் அதிமுக + பாஜக கூட்டணி கூட பாஜக முயன்றது. அமித் ஷாவின் முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பெரிதாக ரிசல்ட் மாறாது. இது ஜெயலலிதா அதிமுக இல்லை. இது எடப்பாடி பழனிசாமி அதிமுக. அப்படி இருக்க அவரால் வாக்குகளை consolidate பண்ண முடியாது.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதி ரீதியாக எதிர்ப்பு உள்ளது. அவரின் சமூகத்தை தவிர மற்ற சமூக மக்கள் கடுமையாக அவரை எதிர்க்கின்றனர். முக்குலத்தோர் எதிர்ப்பு, கொங்கில் உள்ள மற்ற ஜாதியினர் எதிர்ப்பு, பாமக பிரிவால், வடக்கில் வன்னியர்கள் எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி எதிராக பல ஜாதிகள் கூடி உள்ளன. அப்படி இருக்க தன்னுடைய கூட்டணியில் பாஜக இருந்து அவர்கள் ஜெயிக்க கூடாது என்பதால் எடப்பாடி கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

அதிமுக ஜெயிக்காது, அதனால் பாஜகவும் ஜெயிக்க கூடாது என்று எடப்பாடி இப்படி செய்துள்ளார். இப்போது அதிமுக - பாஜக பிரிந்து இருப்பதால் திமுக அணிக்கு களத்தில் போட்டியே இல்லை. 4- 5 தொகுதிகளில் கொஞ்சம் போட்டி இருக்கும். கோவை, தருமபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5-6 தொகுதிகளில் போட்டி இருக்கிறது. மற்றபடி போட்டி இல்லை.

தனக்கு எதிராக பல ஜாதிகள் உள்ளது. நாம் வெல்ல மாட்டோம். ஒருவேளை நம்முடன் சேர்ந்து பாஜக ஒன்று இரண்டு சீட் வென்றால் சிக்கல் ஆகிவிடும் என்பதால் பயந்து பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடப்பாடி எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்த காமெடியின் உச்சம் அவரை ஆளுமை என்று பிரபலப்படுத்துவதுதான். அவர் பெரிய ஆள்தான்., 4 வருடம் ஆட்சி செய்தார். முக்கியமான பல திட்டங்களை கொண்டு வந்தார்.

2021ல் தேமுதிகவை கூட்டணியை விட்டு அனுப்பி விட்டார் எடப்பாடி. அதே தேமுதிகவை மீண்டும் கூட்டணிக்கு சேர்த்துள்ளார் எடப்பாடி. தினகரன் கூட கூட்டணி வைத்த தேமுதிகவுக்கு 5 சீட் கொடுத்துள்ளார் எடப்பாடி. ராஜ்ய சபா வேறு கொடுப்பதாக கூறியுள்ளனர். அது எடப்பாடியின் வீழ்ச்சிதானே. இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி. எடப்பாடி கண்ணுக்கு இந்த வீழ்ச்சி தெரியலையா? எஸ்டிபிஐக்கு ஒரு சீட் கொடுத்துள்ளனர்.

அமமுகவும் முன்பு எஸ்டிபிஐக்கு ஒரு சீட் கொடுத்தது. அப்போது அமமுக அளவிற்கு அதிமுக குறைந்துவிட்டதா? எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை இதுதானா? அந்த அளவிற்கு அவர் குறைந்துவிட்டாரா? என்ன கூட்டணி இது ? என்ன மெகா கூட்டணி இது? நான் சொல்வது பொய்யா சொல்லுங்கள்.

இதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் ரேஞ்சா? என்று ரவீந்திரன் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+