Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிரடி காட்டும் எடப்பாடி.. அதிமுக ஐடி விங் 12 மண்டலங்களாக பிரிப்பு.. திலீப் கண்ணனுக்கு பொறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஐடி விங் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக நிர்வாகிகளை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நான்கு மண்டலங்களாக பிரிந்திருந்த நிலையில், அவற்றை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அண்மையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதிமுக ஐடி விங் தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டார்.

Edappadi palanisamy divided admk it wing into 12 zones: Key post for dilip kannan

அதிமுக ஐடி விங் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜ் சத்யன் கடந்த 2019ஆம் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர். முன்னாள் மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ஆவார். அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர்களாக கோவை சத்யன், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல், அதிமுக ஐடி விங் துணைத் தலைவர்களாக ராஜராஜசோழன், கெளரிசங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட அளவில் ஐ.டி விங் அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

அதிமுக ஐ.டி விங் புதுப்பிக்கப்பட்ட பிறகு தி.மு.க ஐ.டி விங்கிற்கு எதிராக கடுமையாக சண்டை செய்து வருகிறது. அண்மையில், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், திமுக தரப்பு, எடப்பாடி பழனிசாமியை சீண்டிய நிலையில், அதற்கு அதே பாணியில் உடனடியாக ரியாக்ட் செய்து திரும்பிப் பார்க்க வைத்தது அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி.

Edappadi palanisamy divided admk it wing into 12 zones: Key post for dilip kannan

மேலும், அண்மையில் சட்டசபை கூட்டத்தொடரில் காவிரி பிரச்சனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதை திமுக ஐடி விங் ட்ரோல் மீம் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு அதிமுக ஐடி விங் அதே பாணியில் பதிலடி கொடுத்திருந்தது. திமுக ஐடி விங் 2.0 போலவே, அதிமுக ஐடி விங்கும் அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாக வசதிக்காக, 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கு தலைவர், செயலாளர் என நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி என 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அதிமுக ஐடி விங். ஒவ்வொரு மண்டலத்திலும் 4 மாவட்டங்கள் வரை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சென்னை, விருதுநகர், திருநெல்வேலி மண்டலங்களுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளையும் நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi palanisamy divided admk it wing into 12 zones: Key post for dilip kannan

அண்மையில் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணன், விருதுநகர் மண்டல அதிமுக ஐடி விங் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பாஜக ஐ.டி விங்கில் மாநில செயலாளராகப் பணியாற்றியவர். அண்ணாமலையுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக பாஜகவில் ஐடி விங் மாநில தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், செயலாளராக இருந்த திலீப் கண்ணன் ஆகியோர் அங்கிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

திலீப் கண்ணன், அண்ணாமலை மற்றும் அவரது வார் ரூம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பார்ப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் அமர் பிரசாத் ரெட்டியை கூடவே வைத்து சுற்றுவதுதான் இந்த புனிதர் அண்ணாமலையின் வேலை. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ என அதிர்ச்சி பதிவை வெளியிட்டிருந்தார் திலீப் கண்ணன்.

இந்நிலையில், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக அசி.டி.ஆர் நிர்மல் குமார் நியமிக்கப்பட்டார், தற்போது திலீப் கண்ணனுக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த டாக்டர் சரவணனுக்கு அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+