ஆட்டத்தை மாற்றும் ஆளுநர் அஜென்டா.. மே 12 பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமி மெகா திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. சிபிஎம், சிபிஐ கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக ஆதரவுடன் அதிமுகவும் ஆட்சியமைப்பதற்கான முயற்சியில் இறங்கினர். வருகிற 12 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை வைத்து எடப்பாடி காய் நகர்த்துவதாகவும், இதன் பின்னணியில் ஆளுநரும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் உறுதியாக உள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஐயுஎம்எல், அமமுக தவெகவுக்கு ஆதரவில்லை என கூறிவிட்டனர். விசிக தங்களின் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளனர்.

Edappadi Palanisamy Governor DMK

தமிழக அரசியல் பரபரப்பு

தவெகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதது, தவெக மீதான டிடிவி தினகரன் புகார் ஆகியவற்றால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. அடுத்து என்ன நடக்கும் தவெகவுக்கு ஆட்சியமைக்குமா, திமுக ஆதரவுடன் அதிமுக அரியனை ஏறுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருப்பதை பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் மூலம் அரசியல் ஆட்டம் ஆடுவதாக காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று காலை 11 மணி வரை தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வட இந்திய சேனல்கள் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். மேற்குவங்கத்தில் பாஜக வரலாறு படைக்கும் முக்கியமான தருணம் நடைபெறவுள்ளது. பாஜகவின் பதவியேற்பு விழாதான் முழு கவனத்தையும் ஈர்க்கும். பதவியேற்புக்கு பிறகு, அதாவது காலை 11 மணி முதல் மதிய உணவு நேரம், மாலை நேர தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பாஜகவின் வெற்றி எவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக தேசிய ஊடகங்கள் விவாதிக்கும்.

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளில்

நாளை ஞாயிற்றுக்கிழமை தான் உண்மையான அரசியல் அஜெண்டா தொடங்கும். ஊடகங்களில் அதிகம் பேச விரும்பும் தமிழத்தின் பொறுப்பு ஆளுநர், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் அளித்த புகாரின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க தொடங்குவார் என்று நினைக்கிறேன். மேலும், தங்கள் எம்எல்ஏவை லஞ்சம் கொடுத்து கவர முயற்சித்தாக கூறி வழக்குப்பதிவு தாக்கல் செய்யவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்கள் அஷ்டமி மற்றும் நவமி வருகின்றன. இதனால் எந்த பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.

தமிழகத்தில் இதே நிலை தொடர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு நாட்களில் பெரிய முன்னேற்றம் இருக்காது. உண்மையான அரசியல் ஆட்டம் மே 12 ஆம் தேதி முதல் தான் தொடங்கும். அன்றைய தினம் தான் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் " என்று கூறியுள்ளார். ஆக பிறந்தநாளை வைத்து எடப்பாடி நகர்த்தும் காய் நகர்த்தல் தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+