அமித் ஷாவை தனியாக சந்தித்தது ஏன்? உண்மையில் நடந்தது என்ன? மௌனம் கலைத்த எடப்பாடி பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு நேரம் அதிகம் இருந்ததால் அமித் ஷாவுடன் தனியாக பேசினேன்.. நேரம் அதிகம் இருந்ததால் உடன் இருந்தவர்களை அனுப்பிவிட்டு பேசினேன். ஆனால் அமித் ஷாவுடன் 10 நிமிடம்தான் பேசினேன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

டெல்லியில் பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அமித் ஷாவை சந்தித்ததை பற்றி பல விஷயங்களை கூறி வருகிறார்கள். நான் அமித் ஷாவை சந்திக்க போனது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

Edappadi Palaniswami

எனக்கு நேரம் அதிகம் இருந்ததால் அமித் ஷாவுடன் தனியாக பேசினேன்.. நேரம் அதிகம் இருந்ததால் உடன் இருந்தவர்களை அனுப்பிவிட்டு பேசினேன். ஆனால் அமித் ஷாவுடன் 10 நிமிடம்தான் பேசினேன். திமுக அரசை அகற்றுவதில் மக்களும் உறுதியாக இருக்கிறேன். திமுக அரசை அகற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.

காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன்; இதனை அரசியல் செய்தது வேதனை அளிக்கிறது கர்சிப்பால் முகத்தை துடைத்தேன்! ரெஸ்ட் ரூம் போனாலும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டுமா?துணியால் முகத்தை துடைப்பது என்ன தவறு?. திமுக ஆளுங்கட்சியான பிறகு, தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரையெல்லாம் விமர்சித்தார்களோ அவர்களையே ரத்தனக்கம்பளம் வைத்து வரவேற்றனர்
பிரதமரை அழைத்து கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் உட்பட பல நிகழ்ச்சிகளை நடத்தியதையெல்லாம் பார்த்தோம்; எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன் விட்டனர். ஆளுங்கட்சியானவுடன் வெள்ளைக்குடை பிடித்தனர். இதுதான் திமுக-வின் நிலைப்பாடு, என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு

நேற்று முதல்நாள் நேற்று உள்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரின் இந்த செயல் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

இதற்கு முன்பே ஒரு முறை அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன் சென்றார். அதன் புகைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் அப்போது அவர் கார் மாறி மாறி சென்றார். இந்த புகாரை முதல்வர் ஸ்டாலினே வைத்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி செல்கிறார் என்று புகார் வைக்கப்பட்டது. இப்போது அவர் மாஸ்க் போடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று தன்னுடன் வந்த மூத்த நிர்வாகிகளை முன்கூட்டியே தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியாக அமித்ஷா உடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் நடந்த சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று அமித்ஷாவை சந்திக்க டெல்லி போலீசாரின் 2 பாதுகாப்பு வாகனத்துடன் எடப்பாடி பழனிசாமி உள்ளே சென்றார்.

எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு பயணம்

முதலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் 10 நிமிடங்கள் அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. பின்னர், நிர்வாகிகள் மட்டும் அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்தனர். எடப்பாடி பழனிசாமியும் வெளியே சென்றதாக தெரியப்படுத்த டெல்லி போலீசார் வாகனமும் அவர்களுடன் விடுதிக்குச் சென்றது.

பிறகு, ஹிந்தி மற்றும் தமிழ் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் கொண்டு அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். ஆலோசனை முடிந்து போலீஸ் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி காரில் கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே வெளியேறி விடுதிக்குச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+