என்னை யார் ஆதரிச்சீங்க? ஒரு நிமிடம் அப்படியே கலங்கி போய்.. எமோஷனலாக பேசிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: நான் ஆட்சி பொறுப்பேற்றபோது, 4-5 மாதங்களில் ஆட்சி இழப்பேன் என்றுதானே பலரும் சொன்னீர்கள்... ஒரு சாதாரண விவசாயிக்கு யார் ஆதரவு கொடுத்தீர்கள்? என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மிகவும் கலக்கமாக பேசி இருந்தார்.
நேற்று முதல்நாள் நேற்று உள்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரின் இந்த செயல் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

இதற்கு முன்பே ஒரு முறை அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன் சென்றார். அதன் புகைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் அப்போது அவர் கார் மாறி மாறி சென்றார். இந்த புகாரை முதல்வர் ஸ்டாலினே வைத்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி செல்கிறார் என்று புகார் வைக்கப்பட்டது. இப்போது அவர் மாஸ்க் போடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கலக்கமாக பேசி இருந்தார். அதில் நான் ஆட்சி பொறுப்பேற்றபோது, 4-5 மாதங்களில் ஆட்சி இழப்பேன் என்றுதானே பலரும் சொன்னீர்கள்... ஒரு சாதாரண விவசாயிக்கு யார் ஆதரவு கொடுத்தீர்கள்?
என் திறமை, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவால் மட்டுமே ஆட்சி நடந்தது; மத்திய அரசும் நாங்கள் கேட்ட திட்டங்களுக்கு அனுமதியும் நிதியும் கொடுத்தது. அதனால்தான் 4 ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு எங்களுக்கு உதவியது என நான் கருத்து தெரிவித்தேன்.
திமுக அரசை அகற்றுவதில் மக்களும் உறுதியாக இருக்கிறேன். திமுக அரசை அகற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.
அமித் ஷா சந்திப்பு சர்ச்சை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன்; இதனை அரசியல் செய்தது வேதனை அளிக்கிறது கர்சிப்பால் முகத்தை துடைத்தேன்! ரெஸ்ட் ரூம் போனாலும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டுமா? துணியால் முகத்தை துடைப்பது என்ன தவறு?. திமுக ஆளுங்கட்சியான பிறகு, தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரையெல்லாம் விமர்சித்தார்களோ அவர்களையே ரத்தனக்கம்பளம் வைத்து வரவேற்றனர்.
பிரதமரை அழைத்து கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் உட்பட பல நிகழ்ச்சிகளை நடத்தியதையெல்லாம் பார்த்தோம்; எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன் விட்டனர். ஆளுங்கட்சியானவுடன் வெள்ளைக்குடை பிடித்தனர். இதுதான் திமுக-வின் நிலைப்பாடு.
நான் அமித் ஷாவை சந்தித்ததை பற்றி பல விஷயங்களை கூறி வருகிறார்கள். நான் அமித் ஷாவை சந்திக்க போனது எல்லோருக்கும் தெரிந்தது தான். எனக்கு நேரம் அதிகம் இருந்ததால் அமித் ஷாவுடன் தனியாக பேசினேன்.. நேரம் அதிகம் இருந்ததால் உடன் இருந்தவர்களை அனுப்பிவிட்டு பேசினேன். ஆனால் அமித் ஷாவுடன் 10 நிமிடம்தான் பேசினேன், என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மிகவும் கலக்கமாக பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications