"வெறித்தனமா இருக்கணும்".. மா.செக்களை பார்த்து எடப்பாடி சொன்ன வார்த்தை! அடிமட்ட லெவலில் மாஸ்டர்பிளான்
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் கடந்த 8 மாதங்களாக உச்சம் தொட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைவர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். தன்னை ஜெயலலிதா, எம்ஜிஆர் போல அதிமுகவின் வலிமையான தலைவராக முன்னிறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
ஆனால் இதற்கு ஓ பன்னீர்செல்வம் ஒத்துழைக்கவில்லை. கட்சியில் இரட்டை தலைமை இருக்கும் என்று கூறித்தான் என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்கள். அப்படி இருக்கும் போது ஒற்றை தலைமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று பொதுக்குழு முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் போட்டி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகளை ஓ பன்னீர்செல்வம் நியமனம் செய்தார். இவர்கள்தான் அதிமுகவின் உண்மையான நிர்வாகிகள் என்று கூறி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். அதோடு கடந்த வாரம் அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

போட்டி கூட்டம்
ஓ பன்னீர்செல்வம் கூட்டம் நடத்தி அதில் எடப்பாடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர். அவரை நீக்க உனக்கு எப்படி மனம் வந்தது. மகா படுபாவி.. உன்னை அதிமுக மன்னிக்காது. ஓபிஎஸ் ஆகிய நான் சாதாரண தொண்டன். ஆனால் நீ தனியாக கட்சியை கைப்பற்ற துடிக்கிறாய். என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது. எடப்பாடி பழனிசாமியே உனக்கு தைரியம் இருக்கா? அப்படி தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார் என்று கடுமையாக பேசினார்.

என்ன சொன்னார்?
இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கி பேசினார். சிலர் கட்சியை உடைக்க பார்க்கிறார்கள். நாம் வளர்த்த கட்சியை உடைத்து இரண்டாக்க பார்க்கிறார்கள். அவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாம் சட்ட போராட்டம் செய்து கொண்டு இருக்கிறோம். அதில் வெல்வோம். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இதில் இன்னொரு முக்கியமான டாஸ்க்கையும் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் டாஸ்க்
அந்த வகையில் 2024 தேர்தலுக்கு எல்லோரும் இப்போதே தீவிரமாக தயார் ஆகுங்கள். தொகுதி அளவில் புதிய பூத் கமிட்டியை உருவாக்குங்கள். நம்முடைய பலம் பூத் கமிட்டிகள்தான். ஆனால் உட்கட்சி மோதல் காரணமாக இந்த பூத் கமிட்டிகள் பலத்தை நாம் இழந்துவிட்டோம். உடனே பூத் கமிட்டிக்கு ஆள் எடுக்கும் பணிகளை தொடங்குங்கள். நாம் எடுக்கும் ஆட்கள் வெறித்தனமாக இருக்க வேண்டும். வேகமாக வேலை செய்ய வேண்டும். அப்படி துடிப்பான இளைஞர்களை பூத் கமிட்டி ஆட்களாக நியமியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

ஏன் இப்படி
பாஜக தற்போது பூத் கமிட்டியை கொங்கு மாவட்டங்களில் வலுப்படுத்தி வருகிறது. அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் சிலரை தூக்கி அவர்கள் பூத் கமிட்டியை உருவாக்கி வருகின்றனர். இன்னொரு பக்கம் அதிமுகவில் இரண்டு குழு உருவாகி உள்ளதால் அதிமுக பூத் கமிட்டிகளும் பல்வேறு மாநிலங்களில் உடைந்து உள்ளது. இதையும் மனதில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டியை வலிமைப்படுத்துங்கள் என்று கூறி இருக்கிறாராம். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியில் பூத் கமிட்டி காரணமாக பிரச்சனை வர கூடாது என்பதால் எடப்பாடி இந்த உத்தரவை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications