"ப்ரோமோஷன்".. எடப்பாடி டெல்லியில் களமிறக்கிய பெரும் தலை.. இனிமே இவர்தான் எல்லாமே.. மாஸ்டர்பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் முகமாக இனி டெல்லியில் சிவி சண்முகம் எம்பி செயல்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை கட்சி சார்பாக டெல்லியில் எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்துவார் என்று கூறப்படுகிறது.

திமுகவிற்கு என்று டெல்லியில் வலிமையாக முகங்கள் பல உள்ளன. திமுக எம்பிக்கள் கனிமொழி, டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர் டெல்லியில் இருக்கும் வலிமையான திமுக முகங்கள் ஆவர்.

இது போக தயாநிதி மாறன், ஏ.கே.எஸ் விஜயன் போன்றவர்களும் திமுகவின் முகமாக இருக்கிறார்கள். ஆனால் அதிமுகவிற்கு என்று தற்போது உறுதியான முகம் டெல்லியில் இல்லை.

டெல்லியில் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் அதற்கு இங்கிருந்து ஆட்களை அனுப்ப வேண்டிய கட்டாயம்தான் அதிமுகவிற்கு உள்ளது. இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

டெல்லி

டெல்லி

அதிமுக விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் எடப்பாடி டெல்லிக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்த நிலையில்தான் அதிமுகவில் டெல்லிக்கு என்று ஒரு புள்ளியை களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இருந்த அதிமுக எம்பி தம்பிதுரை, தற்போது எடப்பாடியிடம் இருந்து தூரத்தை கடைப்பிடித்து வருகிறார். எடப்பாடிக்கும் - அவருக்கும் நெருக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டும்.

ஓபிஆர்

ஓபிஆர்

அதே சமயம் அதிமுகவின் இன்னொரு எம்பியான ஓ பி ரவீந்திரநாத், டெல்லியில் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர் மோடி, அமித் ஷா ஆகியோருடன் நெருக்கமாக இருக்கிறார். இவரையே கூட டெல்லியின் முகமாக அதிமுக பயன்படுத்தலாம். ஆனால் ஓ பன்னீர்செல்வம் மகன் என்பதால் அதிமுகவில் இருந்தே இவர் நீக்கப்பட்டு உள்ளார். எடப்பாடி இவரையும் டெல்லிக்கு முகமாக பயன்படுத்த முடியாது. இன்னொரு ராஜ்ய சபா எம்பி தர்மர் இருக்கிறார்.

 தர்மர்

தர்மர்

சமீபத்தில் ராஜ்ய சபாவிற்கு தேர்வான அவரும் தற்போது ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருக்கிறார். இதன் காரணமாக தற்போது சிவி சண்முகத்தை டெல்லியில் ப்ரோமோட் செய்யும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் தற்போது ராஜ்ய சபா எம்பி. இவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். சட்டம் படித்தவர். இதனால் இவருக்கு அதிமுகவிற்கு டெல்லியில் நல்ல முகமாக இருப்பார்.

டெல்லி

டெல்லி

இதன் காரணமாக அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுக்க சிவி சண்முகத்தை எடப்பாடி அனுப்பினார். அதன்பின் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்தார். இந்த சந்திப்பில் சிவி சண்முகம்தான் உடன் இருந்தார். இவரை அங்கே கொண்டு செல்ல காரணமும் இதுதான் என்கிறார்கள். சி வி சண்முகத்திற்கு கொடுக்கப்பட்ட ப்ரோமோஷன் இது. இனி அவர்தன டெல்லியில் அதிமுகவின் முகம்.

அதிமுக

அதிமுக

அதிமுக வழக்குகளில் தீர்ப்புகள் வரட்டும். அதன்பின் இவர்தான் டெல்லியில் அதிமுகவிற்கு எல்லாமுமாக இருக்க போகிறார். அதிமுக சார்பாக டெல்லி தலைகளை சந்திக்க போகும் பாயிண்ட் ஆப் காண்டாக்ட் இனி இவர்தான் என்றும் கூறுகிறார்கள், அதிமுகவில் இனி தம்பிதுரை போன்றவர்கள் ஓரம்கட்டப்பட வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள். ஆங்கிலம் - சட்டம் படித்தவர் என்பது மட்டுமில்லாமல் ஜாதி ரீதியாகவும் இவர் டெல்லியில் முன்னிறுத்தப்படுவது அதிமுகவிற்கு உதவும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+