எடப்பாடி பழனிசாமி சொன்ன புதிய கட்சி இதுதானா? அந்த "கெத்து" தலைவர் இங்கே வரப்போறாரா? பலே கூட்டணி
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "விரைவில் ஒரு புதிய கட்சி அதிமுக கூட்டணியில் சேரப்போகிறது" என்று தெரிவித்துள்ளார்.. எடப்பாடி இப்படி சொன்னதுமே அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. அவர் சொன்ன அந்த புதிய கட்சி எது?
தமிழக அரசியல் சூழல் சமீபத்தில் சத்தமில்லாமல் பரபரப்பாக மாறியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம், "அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்றும், அதிமுக தலைமை வேட்பாளராக நியமிக்கப்படும் யாரும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடியதாக இருப்பார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கட்சி - கூட்டணி
இது, தேர்தல் முன் கூட்டணி மாற்றங்கள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் மேலும் ஊட்டியுள்ளது. அத்துடன் விரைவில் அதிமுக கூட்டணியில் ஒரு புதிய கட்சி இணையப்போகிறது" என்று கூறியிருந்தார்.
புதிய கட்சி யார் என்பது அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை.. ஆனால், எடப்பாடி இப்படி சொன்னதுமே அந்த புதிய கட்சி அதிமுகவா? என்ற சந்தேகம் பெருவாரியாக ஏற்பட்டுள்ளது... ஜனநாயகன் சிக்கல் + சிபிஐ விசாரணை என்ற இரட்டை பிரச்சனையில் விஜய் சிக்கி தவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு சொல்லி உள்ளது, பெரும் குழப்பத்தையும், அதேசமயம் சஸ்பென்ஸையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது..
எடப்பாடி பழனிசாமி - அஇஅதிமுக
விஜய்க்கு தற்போது வந்துள்ள நெருக்கடியை ஏற்படுத்தியதே பாஜகதான் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே சொல்லி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் விஜய் வருவாரா? அப்படியே வந்தாலும் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சனை எழாதா? என்பன போன்ற கேள்விகளும் கிளம்புகின்றன.,,
தற்போதைய சூழலில், அதிமுக, பாஜக, அன்புமணியின் பாமக ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளனர்.. இதில் விரைவில் அமமுக வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளது.. அமித்ஷா, டிடிவி தினகரனின் கடந்த வார டெல்லி சந்திப்பு இதை நிரூபித்திருக்கிறது. எனவே எடப்பாடி சொன்னது அமமுகவையா? என்று தெரியவில்லை,
அதேபோல தேமுதிகவை பொறுத்தவரை, மேல்சபை எம்.பி. பதவியுடன் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பதே அந்த கட்சியினரின் விருப்பமாக உள்ளது.. இதற்கு அதிமுக மேலிடம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி சொன்னது தேமுதிகவையா? என்ற சந்தேகமும் எழுகிறது.
மெகா கூட்டணி - தமிழக அரசியல்
அதேபோல பாமக ராமதாஸையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் தைலாபுரத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. மற்றொருபுறம் ஓபிஎஸ்ஸை அதிமுகவுக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் பாஜக மேலிடம் தரப்பில் நடக்கத்தான் செய்கின்றன... அப்படியானால் அதிமுகவுக்குள் வருவது ஓபிஎஸ்ஸா? என்ற சந்தேகமும் பரவலாக வந்து செல்கிறது..
அந்த புதிய கட்சி யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதிமுக-பாஜக கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், எதிர்காலத் தீர்மானங்களுக்கு முன்கூட்டியே கவனத்தை ஈர்க்கும் சூழலை உருவாக்கியுள்ளன... என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக











Click it and Unblock the Notifications