என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம்! ஆனால்..! இஃப்தார் நோன்பில் பஞ்ச் பேசிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இஃப்தார் நோன்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு இன்று நடந்தது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

நோன்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தன்னுடைய வாழ்க்கையின் இளமைக் காலம் முதல் நிறைவு நாள் வரை இஸ்லாமிய நண்பர்கள் பலரை பெற்றிருந்தவர் எம்ஜிஆர்.
தனது நண்பர் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில்தான் மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலை அவர் நடித்த படத்திலேயே பாடிக் காட்டியவர். அந்த மகத்தான மனிதரால்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
இஸ்லாமியத்தை தவறாக சித்தரித்து திரைப்படக் காட்சிகள் வெளிவந்த போதெல்லாம் உறுதிப்பட நின்று கடும் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. அந்த ஒப்பற்ற இரு தலைவர்களின் அரசியலில் உருவாக்கப்பட்டவன் நான்.
அந்த ஒப்பற்ற தலைவர்களை போல் இஸ்லாமிய மக்களுக்கு உற்ற நண்பனாகவும் சகோதரனாகவும் பாதுகாவலனாகவும் இருப்பேன். பதவிக்காகவோ புகழுக்காகவோ அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை.
பேரறிஞர் அண்ணா கூறியபடி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற எண்ணத்தில்தான் வந்தேன். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் கிடையாது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் என இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன்.
எல்லாருக்கும் சமநீதியும், சம பாதுகாப்பும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னை நம்பாவல் கெட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள், நம்பி கெட்டவர்கள் எவரும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்?












Click it and Unblock the Notifications