ட்விஸ்ட்.. உதயநிதி பதவி ஏற்பு விழாவிற்காக எடப்பாடிக்கு போன லெட்டர்? அப்போ ஓபிஎஸ்.. குழப்புதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக உள்ள நிலையில் அவரின் பதவி ஏற்பு விழாவிற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை பதவி ஏற்று ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. 2021 மே மாதம் பதவி ஏற்ற அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறவில்லை.

 இளம் எம்எல்ஏ

இளம் எம்எல்ஏ

அப்போது பெரும்பாலும் இளம் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அன்பில் மகேஷ் போன்ற ஒரு சிலர் மட்டுமே இளம் அமைச்சர்களாக இருந்தனர். அப்போதே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. மூத்த அமைச்சர்கள் பலர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். முக்கியமாக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்பட்டது. அவரின் செங்கல் பிரச்சாரம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அமைச்சரவை

அமைச்சரவை

இருந்தும் உதயநிதிக்கு பதவி வழங்கும் விதமாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவே இல்லை. அதன்பின் 1 வருடம் முடிந்த பின் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று செய்திகள் வந்தன. பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது ஒருவழியாக அமைச்சரவை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியானது.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நாளை காலை அமைச்சராக்கப்பட உள்ளார். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடங்கி பல பணிகளில் நேரடியாக கவனம் செலுத்தினார். இதன் காரணமாக அவருக்கு விளையாட்டுத்துறை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக உள்ள நிலையில் அவரின் பதவி ஏற்பு விழாவிற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

திமுக அதிமுக இடையே கடும் மோதல் உள்ளது, பல்வேறு வழக்குகள் காரணமாக எடப்பாடி - ஸ்டாலின் இடையிலும் கடுமையான மோதல்கள் உள்ளன. ஆனாலும் உதயநிதி பதவி ஏற்பு விழாவிற்கு எடப்பாடி அழைக்கப்பட்டு உள்ளார். முன்னதாக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற போது எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக தலைவர்களுக்கும் 3ம் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன் அதிமுக பதவி ஏற்பின் போது ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன் வரிசையில் அதிமுகவிற்கு திமுக தரப்பு இடம் கொடுத்தது. முதல்வரின் பதவி ஏற்பு விழாவில் நடந்த இந்த சம்பவம் அரசியல் ரீதியான ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டது.

அழைப்பு

அழைப்பு

இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடிக்கு அழைப்பு சென்றுள்ளது. இன்று கூட எடப்பாடி பழனிசாமி சேலத்தில், குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை தலைமைக்கு கொண்டு வர முன்னோட்டம் பார்க்கிறார்கள். அவர் அமைச்சர் ஆனால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா?. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு அழைப்பு சென்றுள்ளது. ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு சென்றதா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+