ஸ்டாலின் சொல்லசொல்ல அச்சு பிசகாமல் அப்படியே செய்கிறார் எடப்பாடி.. உதயநிதி போட்ட டுவிட்
சென்னை: 'இ-பாஸ் முறை ரத்து' என்பது உள்பட திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்திய விஷயங்களை அச்சு பிசகாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். மிக முக்கியமாக இபாஸ் ரத்து, போக்குவரத்துக்கு அனுமதி, வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு ஆட்டோ ஜென்ரேட்ஆக அப்ளை செய்த உடன் இபாஸ் போன்ற அறிவிப்பு கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு தமிழகத்தை கொண்டு சென்றுள்ளது.
அத்துடன் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளித்துள்ளார். இதனால் இதுவரை செயல்படாமல் இருந்த மால்கள் உள்ளிட்ட பெரு வணிக வளாகங்களும் நாளை முதல் இயங்க போகின்றன. மெட்ரோ ரயில்களும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் ஓடப்போகிறது. விமான சேவைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்கள்
கடைகளை 8 மணி வரை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார். ஓட்டல்கள் 9 மணி வரை பார்சல் வழங்கலாம் என்று அறிவித்துள்ளார். முதல்வர் அறிவிப்பில் மிக முக்கியமான இன்னொரு விஷயம் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க உத்தரவிட்டது தான். இதன் மூலம் மக்கள் இனி கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு எளிதாக செல்ல முடியும். இன்னொரு முக்கிய அறிவிப்பு அனைத்து நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார். ரயில் போக்குவரத்தும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு போக்குவரத்து மட்டுமே அறிவிக்கப்படவில்லை. முதல்வரின் தளர்வு அறிவிப்பு தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரியர் ஆல்பாஸ்
இந்நிலையில் அண்மைக்காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஆச்சயர்த்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 10ம் வகுப்பு தேர்வு ஆல் பாஸ், கல்லூரிகளில் தேர்வு ரத்து போன்றவை மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக அரியர் வைத்த அனைவரையும் பாஸ் போட உத்தரவிட்டுள்ளார். இதை இதுவரை எந்த முதல்வரும் செய்தது கிடையாது.

உதயநிதி டுவிட்
முதல்வரின் அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், : 'இ-பாஸ் முறை ரத்து' என்பது உள்பட திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்திய விஷயங்களை அச்சு பிசகாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஸ்டாலின் சொல்கிறார்
10ம் வகுப்பு மற்றும் கல்லூரி தேர்வு ரத்து என அனைத்திலும் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் சொல்கிறார் என்றும் அதை முதல்வர் ஈபிஎஸ் செய்கிறார் என்றும் உதயநிதி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications