எடப்பாடி பழனிச்சாமி ஆங்கில உச்சரிப்பு.. சீமான் ஆதங்கம்.. வைரலாகும் வீடியோ மீம்!
Recommended Video
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ என்று கூட உச்சரிக்க தெரியவில்லை என்று விமர்சனம் செய்யும் வகையிலான, ஒரு வீடியோ மீம், சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் வைரலாக சுற்றி வருகிறது.
அந்த வீடியோவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டிதான் முதலில் இடம் பெற்றுள்ளது. அவர் பேட்டியின்போது, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை விமர்சனம் செய்துள்ளார்.

"இது ஒருகொடுமையாக நான் பார்க்கிறேன். நுட்பமாக கவனித்தால், கல்வி என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம் அதிகாரம் வந்துவிட்டது. மத்திய அரசு சொல்லியதுமே, தமிழக அரசு விரைந்து அதை செயல்படுத்திவிட்டது. கல்வி அமைச்சர்கள் முதலில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்று வரட்டும். பிறகு பிள்ளைகளை படிக்க வைப்போம்.
ஒன்றுமே தெரியவில்லை. பார்த்துபடிக்கும்போதே, லாஸ்ஏஞ்சல்ஸ் என்றோ, சான்பிரான்சிஸ்கோ என்றோ சொல்ல தெரியவில்லை" இவ்வாறு சீமான் பேசுகிறார்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒரு வீடியோ அதில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பேட்டியின்போது, "சான்பிரன்ஸ்கோ.., சான்பிரான்ஸ்கோ.." என்றும், "லாஸ்ஏஜென்ஸ், ஏஜென்ஸ்.." என்றும் தடுமாறியபடி எடப்பாடி பழனிச்சாமி பேசுவதைபோல வீடியோ உள்ளது.
இதற்கு நடுவே, வடிவேலு சினிமாவில் பேசும் டைமிங் காமெடி காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோதான் இப்போது தீயாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications