நீங்க எங்கே வேணா போங்க.. கவலையில்ல! மங்களகரமாக "வேலையை" தொடங்கிய எடப்பாடி.. கிலியில் ஓபிஎஸ் டீம்?
சென்னை: அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான தீவிரமான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்து வருகிறது.
அதிமுக பொதுக்குழுவை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பதில் ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக இருக்கிறார். கடந்த பொதுக்குழுவில் கடைசி நேரத்தில் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பால் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி கூட்டி அங்கு பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்று எடப்பாடி தரப்பு முயன்று வருகிறது.

ஓ பன்னீர்செல்வம்
ஆனால் இதற்கு எதிராக சட்ட ரீதியாக பல்வேறு போராட்டங்களை ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. பொதுக்குழுவில் கடந்த முறை உயர் நீதிமன்ற விதிகள் அவமதிக்கப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. மேலும் பொதுக்குழுவை 11ம் தேதி கூட்ட அனுமதிக்க கூடாது என்றும் மனு தாக்கல் செய்துள்ளது. பொதுக்குழுவிற்கு சட்ட ரீதியாக தடை விதிக்க ஓபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்போ.. ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் கிடையாது என்று வாதம் வைத்து வருகிறது. கடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அது காலாவதி ஆகிவிட்டது என்கிறார் எடப்பாடி. இதனால் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் கிடையாது. பொதுக்குழுவை கூட்ட அவரிடம் அனுமதி வாங்க வேண்டியது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைக்கிறது.

தீவிரம்
இந்த நிலையில்தான் நீங்கள் யாரை வேண்டுமானாலும் சந்தியுங்கள். எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடுங்கள்.. நான் பொதுக்குழுவை கூட்டுகிறேன் என்று அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான தீவிரமான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்காக பல்வேறு இடங்கள் தேடப்பட்டன. ஏற்கனவே பொதுக்குழு நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபம் புக் செய்யப்பட்டுவிட்டது.

இடம் கிடைக்கவில்லை
இதனால் வேறு சில மண்டபங்கள், கல்லூரிகளில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டனர். ஆனால் அங்கெல்லாம் சரியாக இடம் அமையாத காரணத்தால் கடைசியில் வானகரத்திலேயே ஸ்ரீ வாரு மண்டபம் இருக்கும் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர். தற்போது அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக காலையில் மங்களகரமாக பூமி பூஜை அங்கு செய்யப்பட்டது.

பூமி பூஜை
ஜூலை 11ம் தேதி கூட்டம் நடக்க உள்ள நிலையில் மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஜெசிபி இயந்திரம் மூலம் அங்கு செடிகள் நீக்கப்பட்டு, புதர்கள் நீக்கப்பட்டு கட்டுமானம் தொடங்கி உள்ளனது. தற்காலிகமாக பிரம்மாண்ட திறந்த வெளி அரங்கு அங்கு அமைக்கப்பட உள்ளது. இதில்தான் பொதுக்குழு நடக்கும். ஓ பன்னீர்செல்வம் எப்படியாவது பொதுக்குழுவை நிறுத்த முயன்று கொண்டு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவிற்கான ஆயத்த பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications