சொதப்பிட்டீங்களே! கண்டுகொள்ளாத பெண் தொண்டர்கள்.. ஷாக்கான எடப்பாடி! மதுரை மாநாட்டால் அப்செட்! விளாசல்
சென்னை: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பெண்கள் பெரிதாக கலந்து கொள்ளவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும், தென் மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும், திமுகவிடம் தான் எதிர்க்கட்சிதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.. பாஜகவிடமும் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற பல்வேறு "நிரூபிக்க வேண்டும்" காரணங்களால் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டை கூட்டினார்.

அதன்படியே கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த நிகழ்வில் கூடினார்கள். எடப்பாடியின் புகழை அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் பாடினார்கள். அதேபோல் புரட்சி தமிழர் என்ற பட்டம் கூட எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது.
எல்லாம் சரிதான்.. ஆனால் இந்த கூட்டத்தில் மிஸ்ஸானது என்னவோ பெண்கள்தான்.
பெண்கள் கூட்டம்: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பெண்கள் பெரிதாக கலந்து கொள்ளவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. மாநாட்டில் திரண்டிருந்த கூட்டங்களில் பெண்களின் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
அதிமுக மாநாடு என்றாலும், பொதுக் கூட்டம் என்றாலும், போராட்டங்கள் என்றாலும் பெண்களின் கூட்டம் அலைமோதும். ஜெயலலிதா உருவாக்கி வைத்திருந்த இமேஜ் அது. ஜெயலலிதா வந்தாலே அவரை பார்க்க பெண்கள் கூட்டம் வரும். அவர் சிறையில் இருந்த போது பெண்கள் சாப்பிடாத மண் சோறு இல்லை. அந்த அளவிற்கு பெண்கள் இடையே மாபெரும் ஆதரவு ஜெயலலிதாவிற்கு இருந்தது.
ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் பெண்கள் அதிகம் இருப்பார்கள். ஜெயலலிதா செல்லும் இடமெல்லாம் பெண்கள் இருப்பார்கள். கட்சி பொதுக்கூட்டங்களில் பாதிக்கு பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். ஜெயலலிதாவிற்கு என்று பெண்கள் பிரபலம் அதிகம் இருந்தது. பெண்களை வைத்தே பல முறை ஜெயலலிதா போராட்டங்களை மேற்கொண்டு இருக்கிறார். பெண்கள் வாக்குகளும் அதிமுகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவியது.
அந்த வகையில், கூட்டத்தில் திரளும் கூட்டத்தில் சரிபாதி பெண்கள் கூட்டம் இருக்க வேண்டும் என்றும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் எடப்பாடி. அதன்படியே பெண்களை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பெண்களை கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து அழைத்து வர ஏற்பாடு செய்தனர்.

ஆனால் பெண்களை போதிய அளவிற்கு கூட்டத்திற்கு வரவைக்க முடியவில்லை. வடஇந்தியர்கள் பலரை அதிமுகவினர் கொங்கு மண்டலத்தில் இருந்து அழைத்து வந்துள்ளனர். கேரளாவில் இருந்து கோடா ஆட்களை அழைத்து வந்துள்ளனர். ஆனால் பெண்களை கூட்டத்திற்கு அழைத்து வர முடியவில்லை. , மாநாட்டில் பெண்கள் கூட்டம் கணிசமான அளவுக்கு கூட வரவில்லை. மிக மிக குறைவாக இருந்தது.
இதுவும் எடப்பாடியை அப்செட்டாக்கியிருக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன . அதில் பெண்கள் கூட்டம் முக்கிய காரணம் ஆகும், இதற்கான காரணங்களை மாஜிக்களிடமும் மா.செ.க்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார் எடப்பாடி.
எடப்பாடிக்கு பெண்கள் ஆதரவே இல்லை அல்லது குறைவாக உள்ளது என்பதை வெளிப்படையாக நேற்று நடந்த கூட்டம் காட்டியது. கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வார்னிங்காக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது. அதிமுகவிற்கு இந்த பொதுக்கூட்டம் புத்துணர்வை ஏற்படுத்தி இருந்தாலும் பெண்கள் கூட்டம் இல்லாதது கட்சிக்கு கெட்ட செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications