அவர் போகட்டும்.. அப்பறம் பாருங்க! உதயநிதி சொன்னதை கவனிச்சீங்களா? எடப்பாடிக்கு எதிராக பின்னப்பட்ட வலை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோடநாடு வழக்கில் ஆளும் திமுக அரசு முக்கியமான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை எடுக்க சில நாட்கள் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேற்று சனாதனம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோடநாடு வழக்கு குறித்து மறைமுகமாக பேசினார். அதில், சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை- கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது.

ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். "என்ன வாய் மட்டும் வேலை செய்யுது' என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும், என்று கூறினார்.
அதாவது ஆளுநர் உங்கள் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்கவில்லை. அதனால் நீங்கள் தப்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆளுநர் மாற்றப்படுவார். தேசிய அளவில் ஆட்சி மாறும். அப்போது கண்டிப்பாக உங்கள் மீது, புதிய ஆளுநரின் அனுமதியோடு ஆக்சன் எடுக்கப்படும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
கோடநாடு: கோடநாடு வழக்கில் திமுக அரசின் வேகம்தான் இந்த அறிக்கை என்கிறார்கள். வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தும் திட்டத்தில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன வழக்கு இது: ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.
எடப்பாடி மீது நேரடி குற்றச்சாட்டு: இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புகார் மேல் புகார்: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பரபரப்பு பேட்டிதான் இப்போது எழுந்துள்ள பரபரப்பிற்கு காரணம் என்கிறார்கள் அதிமுகவில் விவரம் அறிந்தவர்கள், எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.,
கோடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார்; அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன; எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது வழக்கில் பெரிய திருப்பத்தை அவருக்கு எதிராக ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
நெருங்கிய சிபிசிஐடி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் நிலையில்தான் இது தொடர்பாக சிபிசிஐடி முக்கியமான போன் ரெக்கார்டுகளை கேட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கொள்ளை நடந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட போன், அதில் சயான் உள்ளிட்டோர் மேற்கொண்ட ரெக்கார்டிங் ஆகியவற்றை சிபிசிஐடி கைப்பற்றி உள்ளதாம். இதன் மூலம் முக்கியமான பல ஆவணங்களை, தகவல்களை சிபிசிஐடி கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
என்ன நடக்கிறது?: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முக்கியமான கட்டத்தை சிபிசிஐடி எட்டி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே , கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ஆத்தூரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆத்தூர் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புறவழிச்சாலைகளை இணைக்கும் இடத்தில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன. அது எப்போது அமைக்கப்பட்டது என்ற விவரத்தை எடுத்துள்ளனர்.
கனகராஜ் விபத்தில் சிக்கிய 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி விபத்து நடந்த சிறிது நேரத்தில் வேகத்தடையில் பைக்கில் வந்த ஒருவர் விழுந்து காயம் அடைந்ததாக ஒரு தகவல் பதிவாகியிருக்கிறது. அவர் யார் என்பது குறித்து விசாரிப்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் வேகத்தடைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் யார் யார் இந்த நகராட்சி பகுதியில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்கிறார்கள்.. வேகத்தடை எப்போது அமைக்கப்பட்டது.. எந்தெந்த பகுதியில் இருக்கிறது... தற்போது எந்த இடத்தில் இருக்கிறது.. என்ற விவரங்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.
அது மட்டும் இன்றி நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு தகவல்களை பெற்று ஆவணங்களையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. கோடநாடு கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சிபிசிஐடி மேற்கொண்ட இந்த விசாரணை முக்கியம் பெற்றுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications