Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயிலுக்குள் எடப்பாடி பழனிசாமி விசிட்.. பின்னாடியே போன வேலுமணி.. என்னவாம்?.. புழலில் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்து பேசினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாஜி அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் சிறைக்குள் நுழைந்ததுமே புழல் பகுதியே பரபரப்புக்கு உள்ளாகிவிட்டது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்தது.. அன்றைய தினம், 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றாக ஒரு புகாரை அதிமுகவினர் எழுப்பினர்..

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அப்போது, மாஜி அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அதிமுகவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் நரேஷை தாக்கியுள்ளனர்.. பொதுவெளியென்றும் பாராமல், அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துசென்று போலீசிலும் ஒப்படைத்தனர்.. இந்த சம்பவத்தை ஜெயக்குமாரே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அவர் பதிவிடவும், இந்த செய்தி இன்னும் வைரலாகி விட்டது.

 அதிருப்தி

அதிருப்தி

ஒரு மாநிலத்தின் அமைச்சராக பலமுறை பதவி வகித்த ஜெயக்குமாரா இப்படி ஒரு காரியத்தை செய்தது? என்ற அதிர்ச்சிதான் ஏற்பட்டது.. இது அதிருப்தியாக மாறி அவர் பக்கமே விவகாரம் திரும்பிவிட்டது.. கண்டனங்கள் ஜெயக்குமாருக்குதான் எழுந்தது.. இறுதியில் பாதிக்கப்பட்ட நரேஷே, ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசில் புகார் தரவும், வழக்கும் பதியப்பட்டது. இதன்பேரில் பிப்ரவரி 21ம் தேதி கைதாகி மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயக்குமார்..

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஜாமீன் வேண்டும் என்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்திருக்கிறார்.. ஆனால் நரேஷ் தரப்பில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமாரை சந்திக்க புழல் சிறைக்கு சென்றிருக்கிறார்.. அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் சென்றுள்ளார்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜெயக்குமார்.. எடப்பாடியே நேரில் சென்றுள்ளதால், அநேகமாக ஜெயக்குமாரை விடுவிக்க கட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், ஜெயக்குமாரை எடப்பாடி சந்தித்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது... காரணம், ஜெயக்குமார் கைதாகி இத்தனை நாள் ஆகியும் சிறை வந்து அதிமுக மேலிடம் சந்திக்காமல் இருந்தது.. அன்றைய தினமே கைது நடவடிக்கையை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்..

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

கள்ள ஓட்டு போட முயன்றவரை போலீசில் பிடித்து கொடுத்தது ஒரு குற்றமா? ஜெயக்குமார் செய்தது தவறு என்று ஸ்டாலின் சொல்கிறாரா? என்றெல்லாம் கூட கேள்விகளை எழுப்பியிருந்தார், என்றாலும் இந்த கைதை, எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை.. அதுவும் ஜெயக்குமார் வீட்டுக்குள்ளே சென்று போலீஸ் அவரை கைது செய்யும் என்பது யாருமே அறியாத ட்விஸ்ட்தான்.. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியை பொறுத்தவரையிலும் சரி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 8 மாத காலத்திலும் சரி, எடப்பாடியின் குரலாய் அனைத்து விவகாரங்களிலும் ஒலித்து கொண்டிருந்தது ஜெயக்குமார்தான்..

ஜெயக்குமார்

ஜெயக்குமார்


பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜெயக்குமார்.. எடப்பாடியே நேரில் சென்றுள்ளதால், அநேகமாக ஜெயக்குமாரை விடுவிக்க கட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், ஜெயக்குமாரை எடப்பாடி சந்தித்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது... காரணம், ஜெயக்குமார் கைதாகி இத்தனை நாள் ஆகியும் சிறை வந்து அதிமுக மேலிடம் சந்திக்காமல் இருந்தது.. அன்றைய தினமே கைது நடவடிக்கையை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்..

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை சந்தித்த பின் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "பல வழக்குகள் நிலுவையில் உள்ள போதும் அரசு வேண்டுமென்றே ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது... இப்படித்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு பெண் என்று பாராமல் சட்டசபையில் அராஜகம் செய்தது ஆளும் கட்சியாக இருந்த திமுக.

வாக்கு இயந்திரம்

வாக்கு இயந்திரம்

அவர்கள் ஆளுங்கட்சியாக வந்தால் இது போன்று தான் செய்வார்கள்.. வாக்கு இயந்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றது குறித்து நீதிமன்றத்தை நாட முயன்றதை எதிர்க்கட்சிகள் நசுக்குகின்றன.. தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக உள்ளது.. காவல்துறை ஏவல் துறையாக மாறியுள்ளது.. நாங்கள் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை எப்படி நடத்தினோம் என்பதை உணரவேண்டும் என்று கூறினார்.

Recommended Video

    ஜெயக்குமாரை ரகசிய Spot-க்கு கூட்டி போய்! பரபர நிமிடங்கள் | Oneindia Tamil
    எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    ரவுடிகளையும் குண்டர்களையும் தேர்தலில் கைது செய்யாமல் அவர்களை ஏவியதால் இதுபோன்ற பிரச்சனைகள் நிலவி வருகின்றன.. திமுக 9 மாத கால ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தில் உள்ளாட்சி தேர்தலில் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது.. கள்ள ஓட்டு போட முயன்றவர் பல்வேறு குற்றங்களில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று ஜாமீனில் வந்துள்ள நபர் அவரை கைது செய்யாமல் ஜனநாயக கடமையாற்றி கள்ள ஓட்டை தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+