எடப்பாடிக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. தொடர் தோல்வி எதிரொலி! கையை விட்டு போகிறது கட்சி!
சென்னை: சட்டமன்ற பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் ஜெயித்திருந்த அதிமுக, இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையை அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களால் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லையாம். ஒரே புலம்பல்களாக அக்கட்சியில் எதிரொலித்தபடி இருக்கி றது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை கரித்து கொட்டுகிறார்கள்.
தமிழக அரசியலில் நேற்று வெளியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளன. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் இவ்விரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முடிவுகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு மரண அடியாக மாறியுள்ளன.

அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது
இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ஆளுங்கட்சியான தவெக பக்கம் தாவத் தயாராகி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கட்சியைப் பிளக்கும் திட்டங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் தவெக, திமுக, அதிமுக என கடுமையான மும்முனைப் போட்டி நிலவியது.
தாராபுரம் தொகுதி இறுதி நிலவரம்:
பி. சத்தியபாமா (தவெக): 66,841 வாக்குகள் (வெற்றி)
எஸ். சுகன்யா (திமுக): 57,370 வாக்குகள் (இரண்டாம் இடம்)
க. பானுமதி (அதிமுக): 45,280 வாக்குகள் (மூன்றாம் இடம்)
கார்த்திகா (நாம் தமிழர் கட்சி): 5,268 வாக்குகள்
லட்சுமணன் (சிபிஐ): 1,157 வாக்குகள்
மதுராந்தகம் தொகுதி இறுதி நிலவரம்:
கே. மரகதம் குமரவேல் (தவெக): 72,240 வாக்குகள் (வெற்றி)
இ. பரந்தாமன் (திமுக):*52,098 வாக்குகள் (இரண்டாம் இடம்)
எஸ். கணிதா சம்பத் (அதிமுக): 46,356 வாக்குகள் (மூன்றாம் இடம்)
ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி): 2,298 வாக்குகள்
பி. சுகந்தி (சிபிஎம்): 1,701 வாக்குகள்
அதிமுக நம் கஸ்டடியில் இருக்க வேண்டும்
இந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களிடம் பேசும் அதிமுகவின் மா.செ.க்கள், ஆட்சியை கைப்பற்றுகிறோமோ இல்லையோ அதிமுக நம் கஸ்டடியில் இருக்க வேண்டும் என்கிற மனநிலையில் எடப்பாடியார் இருந்து வந்ததால்தான் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாமல் சுருங்கிப் போனோம்.
இப்போ இடைத்தேர்தல் தோல்வியால், கட்சியும் சுருங்கி வருகிறது. இனியும் அவர் (எடப்பாடியார்) பிடிவாதமாக இருந்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்குள் அதிமுக மொத்தமாக கரைந்து விடும். அதனால், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் என எல்லோரையும் கட்சிக்குள் மீண்டும் கொண்டு வர முயற்சி அவர் முயற்சிக்க வேண்டும். அதற்கு இடம் தரவேண்டும்.
இதை செய்யத் தவறினால், புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக வை அழித்த பாவத்திற்கு எடப்பாடியார் ஆகக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான சீனியர் லீடர்களிடம் ஆதங்கப்பட்டு வருகிறா ர்கள் மா.செ.க்கள்.
அதற்கு சீனியர் லீடர்கள், உங்கள் கவலை புரிகிறது. எடப்பாடியாரை வழிக்கு கொண்டு வரும் யுக்தி எங்களுக்கு தெரியும். கவலைப்படாதீர்கள். இது குறித்து அவரிடம் பேசுகிறோம் என்று உறுதித்தந்துள்ளனர். ஆக, எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளையும் வியூகங்களையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறது இந்த இடைத் தேர்தல் முடிவுகள் என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.
- சிறப்பு நிருபர் எழில்




Click it and Unblock the Notifications
