முதல்வர் ஆவேன் என இபிஎஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.. ரஜினிகாந்த் பரபர பேச்சு!
முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், அவர் ஆட்சி கவிழும் என்று பலர் நினைத்தார்கள், ஆனால் கவிழவில்லை , அது மிகப்பெரிய அதிசயம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி இதற்காக நேற்று விழா எடுக்கப்பட்டது. 'கமல் 60' என்ற பெயரில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இந்த விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்தது.
நடிகர் ரஜினிகாந்த், வடிவேல் உள்ளிட்ட முக்கிய திரைத்துறையினர் பலர் இதில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் பேசினார்.

அரசியலில் நடக்கும்
நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சில், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் அவரே எதிர்பார்க்காமல் அவர் முதல்வராக பதவி ஏற்றார். அதுதான் வாழ்க்கை. இதில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.

முதல்வர் ஆட்சி
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது.

என்ன அதிசயம்
அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலை கவனமாக பார்க்க வேண்டும்.

கமல்ஹாசன்
சினிமா துறையில் இயக்குநராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, பின்னணி பாடகராக ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது இந்த உலகில் கமல்ஹாசன் மட்டுமேதான். அவர் சிறு வயதிலேயே பல விஷயங்களை கற்றுக்கொண்டு ஆச்சர்யப்படுத்தினார். அவர் இப்போதும் என்னை பிரம்மிக்க வைக்கிறார், என்று நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications