அடுத்தடுத்த ரெய்டு.. அசைந்து கொடுக்காத "தலை".. ஓபிஎஸ் vs எடப்பாடி.. டெல்லி சப்போர்ட் யாருக்கு?
சென்னை: டெல்லி பயணத்தை எடப்பாடி பழனிசாமி பாதியில் முடித்துவிட்டுப் சென்னை திரும்பி உள்ளார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இருவரில் டெல்லியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி மோதல் மீண்டும் டெல்லி வரை சென்று இருக்கிறது. 2017ல் டெல்லியில் நடந்த அதிமுக பஞ்சாயத்து மீண்டும் 2022ல் திரும்பி வந்துள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக டெல்லிக்கு கடந்த வாரம் சென்றார். 5 நாட்கள் அங்கே தங்க வேண்டியவர் 4 நாட்கள் மட்டுமே தங்கிவிட்டு திரும்பி வந்தார்.

திரும்பி வந்தார்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து, அதன்பின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதே எடப்பாடியின் பயண திட்டமாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே முர்முவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பாதியில் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்தார்.

சந்திக்கவில்லை
இருவருமே பிஸி.. நேரம் இல்லை என்று எடப்பாடியிடம் டெல்லி தரப்பு காரணமாக கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் டெல்லியின் ஆதரவு கிடைக்காத அதிருப்தியில் எடப்பாடி தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் உச்ச தலை அசைந்து கொடுக்கவே இல்லை. பல முறை அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும் கொடுக்கவில்லை.. சில விஷயங்களை பேசலாம் என்று நினைத்தோம் ஆனால் முடியவில்லை, என்ற அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி டீம் இருக்கிறதாம்.

ஓபிஎஸ் சந்திக்கவில்லை
இதற்கு முன்பு ஓபிஎஸ்ஸும் டெல்லிக்கு சென்று இருந்தார். முர்மு தேர்தல் ஆணையத்தில் வேட்புமனு தாக்கல் செய்த போது ஓபிஎஸ் டெல்லி சென்றார். அப்போதும் மோடியை ஓபிஎஸ் தனியாக சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. மாறாக சில பாஜக தலைவர்களை, பாஜக அமைச்சர்களை ஓபிஎஸ் டெல்லியில் சந்தித்தார். அதோடு ஓபிஎஸ்ஸுக்கு கொஞ்சம் கூடுதல் மரியாதை இந்த டெல்லி பயணத்தில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது எடப்பாடிக்கு கிடைக்காத மரியாதைஇவருக்கு கிடைத்தது.

யாருக்கு சப்போர்ட்?
இந்த நிலையில்தான் டெல்லி சப்போர்ட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கு டெல்லி ஆதரவு கொடுக்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதற்கு பாஜக சார்பாக டெல்லியில் இருந்து யாருமே இதுவரை வாழ்த்தவில்லை. இப்போதுவரை பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ, நட்டவோ எடப்பாடியை வாழ்த்தவில்லை. இதனால் எங்கே ஓ பன்னீர்செல்வத்திற்கு டெல்லி ஆதரவு கொடுக்கிறதோ? என்ற விவாதம் எழுந்துள்ளது.

ரெய்டு
அதோடு எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டும் இந்த கேள்வியை வலிமையாக்கி உள்ளது. அதன்படி எடப்பாடியின் மாமனாருக்கு நெருக்கமான செய்யாதுரை வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு, எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் வீட்டில் ரெய்டு, காமராஜ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு என்று அடுத்தடுத்து எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கிறது. அதேபோல் சி விஜயபாஸ்கரும் சிபிஐ மூலம் குட்கா வழக்கில் குறி வைக்கப்பட்டு உள்ளார்.

எடப்பாடிக்கு நெருக்கடி
இப்படி வரிசையாக எடப்பாடிக்கு நெருக்கமான ஆட்கள் டெல்லி தரப்பால் குறி வைக்கப்பட்டுள்ள நிலையில்.. எங்கே டெல்லி எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்துகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் வலிமையான ஒற்றை தலைமை இருந்தால் அது பாஜகவிற்கு சிக்கல். பாஜக தனிப்பெரும் எதிர்க்கட்சியாக தமிழ்நாட்டில் உருவாக்க முடியாது. இதனால் எடப்பாடியின் பலத்தை குறைக்கும் வகையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக டெல்லி காய் நகர்த்துகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

என்ன காரணம்?
அதேபோல் அதிமுகவில் ஓபிஎஸ் - எடப்பாடி - சசிகலா பிளவு இருந்தால் வாக்குகள் பிரியும். இது திமுக கூட்டணிக்குத்தான் சாதகமாக முடியும். பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் தோல்வியை தழுவும். அதிமுக சேர்ந்து இருந்தால்தான் நாமும் வெற்றிபெற முடியும் என்று பாஜக நினைப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது அதிமுகவில் சசிகலா எல்லா தலைவர்களும் சேர்ந்து இருந்தால்தான் பாஜக - அதிமுக கூட்டணி வெல்லும் என்பதால்.. எடப்பாடிக்கு தனிப்பட்ட ஆதரவை டெல்லி வழங்கவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு












Click it and Unblock the Notifications