டீமை போடுங்க.. உடனே விஜயிடம் பேசுங்க.. எடப்பாடி உருவாக்கும் ஆக்சன் அணி.. எதற்கு தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு அதிமுக மற்றும் தவெக இடையே சாத்தியமான கூட்டணியை ஆராயும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

கட்சி வட்டாரங்களின்படி, விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்திய இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவை கொண்டு செல்ல இந்த கூட்டணி உதவும் என்று எடப்பாடி நினைக்கிறாராம். விஜய் மூலம் அதிமுக கட்சியை இளைஞர்களிடம் கொண்டு செல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.
விஜயின் அரசியல் திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் நேரடி விவாதங்களை மேற்கொள்ள ஒரு குழுவை உருவாக்க எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறாராம். எடப்பாடிக்கு நம்பகமான கட்சித் தலைவர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள்.
இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அதிகாரபூர்வமற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமித் ஷா உத்தரவு
ஏற்கனவே பாஜக தலைவர் அமித் ஷா, விஜயுடன் தொடர்பில் இருக்குமாறும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பக்கம் அவரை கொண்டு வரவும் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஏதாவது செய்யுங்கள்.. எந்த offer வேண்டுமானாலும் கொடுங்கள்.. விஜயை சம்மதிக்க வைத்து, தமிழக பாஜக, அதிமுக, மற்றும் TVK ஆகிய மூன்று கட்சிகளும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு ஈபிஎஸ்-க்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகுதான் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நகர்வு வந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் செல்வது குறித்து தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.
எடப்பாடி பிளான்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உடன் கூட்டணி வைக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வரும் நிலையில்.. இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். தேமுதிக - அதிமுக இரண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் திமுகவை வீழ்த்திய அரசியல் வரலாறு தமிழ்நாட்டில் மறக்க முடியாதது. அதேபோன்ற வரலாற்றை மீண்டும் விஜயை வைத்து செய்யலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 48 மணி நேரமாக அதிமுக டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications