செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்!
சென்னை: தவெக கட்சியின் செய்யாறு தொகுதியின் வேட்பாளராக களமிறங்கும் அதிமுக மாவட்டச் செயலாளர் தூசி.கே.மோகனை கட்சியில் இருந்து நீக்குவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 3 கட்டங்களாக வெளியானது. அதில் தூசி.மோகனுக்கு சீட் கொடுக்கவில்லை.

மேலும் கட்சியிலும் அவருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற அதிருப்தியில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் இன்றைய தினம் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார்.
அவ்வாறு இணைந்த தூசி கே.மோகனுக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் 234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
தூசி மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக வேட்பாளர் ஜோதி வென்றார். இதனால் 2026 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவர் அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார்.
இந்த நிலையில் தூசி கே. மோகனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், சத்தியபாமா, செல்வம், ரெட்டியார்பட்டி நாராயணன், வி.எஸ்.பாபு, நிர்மல் குமார் உள்ளிட்டோர் வரிசையில் தூசி மோகனும் தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றார்.
-
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications