கூட்டணியில் குழப்பமா? அமித்ஷா சென்னை வரும் போது.. கோவைக்கு சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூலை 7ஆம் தேதி சென்னை வரவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7ஆம் தேதி கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது விவாதமாகி இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்வதற்கு அமித்ஷா தவிர்த்திருந்தார். இந்த சூழலில், அமித்ஷா வருகைக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்வது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2வது வாரத்தில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணி அமைத்ததாக அறிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி
அதன்பின் அமித்ஷாவுக்கு க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி விருந்து வைத்தார். இதன்பின் அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக கருத்து சொல்ல தடை விதித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறி வந்தனர்.
அமித்ஷா சொன்ன வார்த்தை
மதுரை வந்த அமித்ஷா, கூட்டணி ஆட்சி என்பதை தெளிவாக கூறினார். அதேபோல் முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டனர். அதற்கு அதிமுக தரப்பில் அடுத்த நாள் விளக்கம் அளிக்கப்பட்ட போதும், பாஜக அமைதியாகவே இருந்தது. இந்த நிலையில் என்டிஏ கூட்டணி வென்றால் அதிமுகவைச் சேர்ந்தவர் முதல்வர் என்று கூறிய அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிப்பதை தவிர்த்தார்.
மதுரை வந்த அமித்ஷா
இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கூட்டணி அமைத்த நாளில் இருந்தே பாஜக நிர்வாகிகள் அதிமுகவை சீண்டி வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனிடையே அமித்ஷா மதுரை வந்தபோது, எடப்பாடி பழனிசாமியோ அல்லது கூட்டணி கட்சித் தலைவர்களையோ சந்திக்கவில்லை.
ஜூலை 7ல் சென்னை வரும் அமித்ஷா
இந்த நிலையில் அமித்ஷா மீண்டும் ஜூலை 7ஆம் தேதி சென்னை வரவுள்ளார். இந்த முறை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித்ஷா, தேர்தல் தொடர்பாக சில நிர்வாகிகளுடன் தனியறையில் ஆலோசிக்க உள்ளார். சென்னை வரும் போது அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
ஆனால் ஜூலை 7ஆம் தேதியே எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதா என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications