அதிமுகவுடன் 10 திமுக எம்எல்ஏக்கள் பேச்சுவார்த்தையாம்.. பகீர் கிளப்பிய பழனிசாமி.. படார் குண்டு!
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.
கடந்த மாதம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது, அவரது அணியில் இருந்த ஆறுகுட்டி, பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு தாவினார். 2021தேர்தலில் தோல்வியடைந்த அவர் எடப்பாடி அணியில் இருந்து வந்த நிலையில் கட்சி தாவினார்.

திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் திமுக எம்பி செந்தில்குமார். அதில், மூன்று இரட்டை இலைகளின் எமோஜி அடுத்து ஒரு அம்பு குறி எமோஜி அடுத்து ஒரு உதயசூரியன் எமோஜியை பதிவிட்டு இருந்தார். அதிமுகவை சேர்ந்த 3 பேர் திமுகவுக்கு வரப்போவதை குறிக்கும் வகையில் அந்த அந்த பதிவு இருந்தது.

மேற்கு மண்டல எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதையே செந்தில்குமார் சூசகமாக தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் திமுகவில் இணையவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆபரேசன் கொங்கு
இந்த நிலையில் தருமபுரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில்குமாரிடம் அதிமுகவினர் திமுகவில் இணைவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "கொங்கு மண்டல அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் திமுகவில் இணைய இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது." என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்து இருக்கிறார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காகவே நடைபயணம் மேற்கொள்கிறார். திமுக கார்ப்பரேட் கட்சி. அதிமுக தொண்டர்களுக்கான கட்சி." என்றார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications