தோனியின் புகழை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடுவர்.. எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்
சென்னை: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மகேந்திர சிங் தோனியின் புகழ் அனைத்து இந்தியராலும் கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் தோனி ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

இந்த நிலையில் அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பலர் அவரைப் பாராட்டி கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் எம்எஸ் தோனியின் பெயர் வரலாற்றில் இடம் பிடிக்கும். அவர் இதுவரை 331 சர்வதேச போட்டிகளை இந்தியா சார்பில் வழி நடத்தி சென்றார்.

3 சாம்பியன்ஷிப்களை வென்றுள்ள ஒரே கூல் கேப்டன் தோனிதான். அவரது புகழ் ஒவ்வொரு இந்தியராலும் பாராட்டப்படும் என தோனி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications