சசிகலா குறித்து ஓபிஎஸ் சொன்ன கருத்தில் தவறில்லை.. ஆனால்.. எடப்பாடி பழனிச்சாமி சொன்ன ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா மீது எனக்கு அன்பும் அபிமானமும் இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா மீது சாப்ட் கார்னர் உள்ளது. அதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அவர் சசிகலா குறித்து கூறிய கருத்துகள் எல்லாமே அல்டிமேட்! ஆணையத்தில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சசிகலா என குறிப்பிடாமல் சின்னம்மா என்றே ஓபிஎஸ் குறிப்பிட்டாராம்.

இன்னொரு சாராரோ சசிகலா வந்தால் அவரது குடும்பத்தின் பிடியில் அதிமுக சென்றுவிடும் என அஞ்சுகிறார்கள். எனவே கடந்த சில தினங்களாக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.

அதிமுக

அதிமுக

கஷ்டமே படாமல் அதிமுக தனது கைகளில் வந்து சேர வேண்டும் என சசிகலா கருதுகிறார். இதற்காக ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணம் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலாவை அதிமுகவில் இணைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து கட்சி தலைமைகளான ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸிடமே இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா மீது சாப்ட் கார்னர் உள்ளது. இது பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அவர் சசிகலா குறித்து கூறிய கருத்துகள் எல்லாமே அல்டிமேட்! ஆணையத்தில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சசிகலா என குறிப்பிடாமல் சின்னம்மா என்றே ஓபிஎஸ் குறிப்பிட்டாராம்.

 சசிகலா மீது தனிப்பட்ட முறை

சசிகலா மீது தனிப்பட்ட முறை

அது போல் "சசிகலா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் அன்பும் அபிமானமும் இருக்கிறது" என்றும் ஓபிஎஸ், ஆணையத்தில் தெரிவித்துள்ளார். அது போல் அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சசிகலாவை அதிமுகவில் இணைப்பார்களா என கேள்விக்கு ஆணையத்தில் என்ன பதிலை தெரிவித்தாரோ அதே பதிலை ஓபிஎஸ் அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

ஆனால் முன்னர் ஒரு முறை செய்தியாளர்கள் கேட்ட போது அய்யோ ஆளைவிடுங்க என கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து எஸ்ஸானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து விமர்சித்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் மீண்டும் சசிகலா?

அதிமுகவில் மீண்டும் சசிகலா?

அவர் கூறுகையில் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை. சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சசிகலா குறித்து அரசியல் ரீதியாகவும் பொது பிரச்சினையிலும்தான் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றார் ஈபிஎஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+